இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சபரிமலையில் நாளை நடை திறப்பு தினசரி 250 பக்தர்களுக்கு அனுமதி

10/15/2020 5:06:00 PM
கோயம்பேடு, வேளச்சேரியில் புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து வர்த்தக காஸ் சிலிண்டர் ரூ268.50 அதிகரிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

திருவனந்தபுரம்: கொரோனா பரவலை தொடர்ந்து பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மார்ச் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த வருடம் மண்டல கால பூஜைக்கு பக்தர்களை அனுமதிப்பதற்கு முன்னோடியாக ஐப்பசி மாத பூஜைகளின்போது தினமும் 250 பக்தர்களை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கு அரசும் அனுமதி அளித்துள்ளது.

பக்தர்கள் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. 2 நாளில் 5 நாட்களுக்கான அனுமதியும் முடிந்துவிட்டது. இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்துவார். நாளை வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் ஐப்பசி மாத பூஜைகள் தொடங்கும்.

7 மாதங்களுக்கு பின்னர் சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். சபரிமலை வரும் பக்தர்களுக்கு நிலக்கல் பகுதியில் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதி இல்லை. ஷவர்கள் மூலம் குளிப்பதற்கு பம்பையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 17ம் தேதி சன்னிதானத்தில் வைத்து சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் கோயில்களுக்கான புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் சில
  • அரசு முழு மரியாதையுடன் புனித்ராஜ்குமார் உடல் அடக்கம்: 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்ணீர் அஞ்சலி



  • போதை பார்ட்டி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஷாருக்கான் மகன் ஜாமீனில் விடுதலை



  • டென்னிஸ் வீரர், நடிகைகள் திரிணாமுல்லில் இணைவு; பாஜகவின் கருப்பு கொடிக்கு ‘நமஸ்தே’ கூறிய மம்தா: கோவா கூட்டத்தில் பரபரப்பு



  • மாரடைப்பால் காலமான கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் இன்று மாலை அடக்கம்: லட்சக்கணக்கானோர் கண்ணீர் மல்க அஞ்சலி



  • ஜி-20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க ரோம் சென்றார் பிரதமர் மோடி: வாடிகனில் போப் ஆண்டவரையும் சந்திக்கிறார்



  • உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • லக்கிம்பூர் வன்முறையை 23 பேர்தான் பார்த்தார்களா?.. உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி



  • 5 மாநில தேர்தல் குறித்து சோனியா ஆலோசனை: மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்பு



  • திரையுலக சாதனைகளை பாராட்டி நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: தனுஷுக்கு தேசிய விருது; துணை ஜனாதிபதி வழங்கினார்.!



  • ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு 36 மணிநேர உண்ணாவிரதம் துவங்கினார்: முதல்வர் ஜெகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]