இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தெலங்கானாவில் கொட்டித்தீர்த்த கனமழை: வீடுகள் இடிந்து 11 பேர் பலி

10/14/2020 5:24:26 PM
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

திருமலை: வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக ஆந்திர வடக்குப்பகுதி மற்றும் தெலங்கானா மாநிலத்தில் நேற்று காலை முதல் பலத்த சூறாவளி வீசியது. இதனால் நேற்று காலை விசாகப்பட்டினம் துறைமுகம் அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த வங்கதேசத்தை சேர்ந்த சரக்கு கப்பல், நங்கூரத்தை அறுத்துக்கொண்டு கரை ஒதுங்கியது. இதில் இருந்த 15 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பலத்த காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று மாலை முதல் தெலங்கானா மாநிலத்தில் கனமழை பெய்யத்தொடங்கியது. விடியவிடிய இன்று 2வது நாளாக மழை பெய்து வருகிறது. பலத்த மழையால் ஐதராபாத் உள்ளிட்ட 17 மாவட்டங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பெரும்பாலான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். ஐதராபாத் ஓல்டுசிட்டி பகுதியில் உள்ள முகமதியான் ஹில்ஸ் பகுதியில் உள்ள 10 வீடுகள் கொண்ட காம்பவுண்ட் சுவர் மீது ராட்சத பாறை சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 2 மாத கைக்குழந்தை உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயடைந்தனர்.

இதுதவிர மாநிலத்தில் ஆங்காங்கே வீடுகள் இடிந்ததில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்தவர்கள் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து 2வது நாளாக கனமழை தொடர்வதால் மீட்பு பணியை மேற்கொள்ள முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது.  இதற்கிடையில் மீட்பு பணியில் தீவிரம் காட்ட அரசு அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. இதனிடையே ஐதராபாத் வரலாற்றில் முதன்முறையாக 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டில் 20 சென்டி மீட்டர் மழைபதிவாகியிருந்தது. இதுவே அதிகபட்ச மழைப்பதிவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு



  • ‘‘10 தொகுதிகள்தான் என அதிமுக கறார்’’: அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேற முடிவு?: 30ம் தேதி முக்கிய அறிவிப்பு



  • ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புக்கு அதிமுகவினர் படையெடுப்பு: சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் நோயாளிகள் பாதிப்பு



  • நாட்டின் 72வது குடியரசு தினவிழா தமிழகத்தில் கோலாகல கொண்டாட்டம்; கவர்னர் பன்வாரிலால் தேசியக்கொடியை ஏற்றினார்



  • சித்தூர் அருகே நள்ளிரவு கொடூரம்: நிர்வாணப்படுத்தி 2 மகள்கள் நரபலி பேராசிரியர் தம்பதி வெறிச்செயல்



  • 5 முதலாளிகளுக்கு மட்டுமே மோடி ஆதரவு; தமிழக மக்களை பற்றி பாஜவுக்கு அக்கறையில்லை: கரூரில் ராகுல் காந்தி தாக்கு



  • பேச்சுவார்த்தைக்கு குடிநீர் வாரிய அதிகாரிகள் அழைப்பு: சென்னை குடிநீர் ஒப்பந்த லாரிகள் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ்



  • திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாளில் 1 கோடி மனு மீது தீர்வு: மு.க.ஸ்டாலின் அதிரடி வாக்குறுதி



  • கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி 29ம் தேதி கலெக்டர்களுடன் ஆலோசனை



  • பணி நியமனம் கிடைக்காமல் ஏமாற்றம்; அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை ஆசிரியர்கள் முற்றுகை: கோபியில் பரபரப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]