இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

திரிபுரா பாஜ ஆட்சிக்கு ஆபத்து?... 7 அதிருப்தி எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாம்

10/12/2025 6:06:45 PM
7.5% உள்ஒதுக்கீடு ஒப்புதல் தர தாமதம்: ஆளுநர் மாளிகை திமுக முற்றுகை...மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி கிடையாது: வழிகாட்டு நெறிமுறைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்

அகர்தலா: திரிபுராவில் ஆளும் பாஜக ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் முதல்வருக்கு எதிராக 7 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் முதல்வர் பிப்லாப் குமார் தேப் தலைமையிலான பாஜக. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 60 எம்எல்ஏக்களில் 36 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள். அவர்களில் 7 பேர் முதல்வர் பிப்லாப் குமாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். மூத்த தலைவர் சுதீப் ராய் பர்மன் தலைமையிலான 7 எம்எல்ஏக்கள் குழு டெல்லி வந்துள்ளது. அவர்கள் பாஜக தலைமை அலுவலகத்தில் முகாமிட்டுள்ளனர். இதுகுறித்து சுதீப் ராய் பர்மன் கூறகையில், ‘முதல்வர் பிப்லாப் சர்வாதிகாரமாக செயல்படுகிறார்.

அனுபவம் இல்லாதவர், மக்கள் செல்வாக்கு கிடையாது. எனவே அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்திக்க வந்துள்ளோம். ஜே.பி.நட்டாவை சந்திக்காமல் ஊர் திரும்ப மாட்டோம். எங்களுக்கு மேலும் 2 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதால், டெல்லி வரவில்லை’ என்றார். ஆனால், திரிபுரா மாநில பாஜக தலைவர் மாணிக் ஷா கூறுகையில், ‘பிப்லாப் தலைமையில் பாஜக அரசு பாதுகாப்பாக உள்ளது. ஏழு, எட்டு எம்எல்ஏக்கள் சேர்ந்து இந்த ஆட்சியை கவிழ்த்து விட முடியாது’ என்றார். திரிபுரா பாஜகவில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளதால், பிப்லாப் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுமா? ஏன்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் சில
  • உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி கிடையாது: வழிகாட்டு நெறிமுறைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்



  • பீகார் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி : தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு



  • சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்



  • இந்தாண்டு தமிழக அரசு பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்



  • கடும் குளிரில் கொரோனா வேகமாக பரவுவதால் டெல்லி உள்பட 4 மாநிலங்களில் 2ம் அலை?: உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம்



  • போதை பொருள் வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க கோரிக்கை வெடி பொருளுடன் நீதிபதிக்கு கொலை மிரட்டல்: பெங்களூருவில் பெரும் பரபரப்பு



  • டிசம்பருக்குள் 30 கோடி தடுப்பூசி: பொதுமக்களுக்கு மார்ச்சில் விநியோகிக்க முடிவு



  • மோடியின் புகைப்படத்தை போடுவதில் சர்ச்சை: எனது மார்பை கிழித்து பாருங்கள்..!: நிதிஷ்குமாருக்கு சிராக் பஸ்வான் பதிலடி



  • போலீஸ்காரரை அடித்த வழக்கில் பெண் அமைச்சருக்கு 3 மாதம் சிறை: மகாராஷ்டிராவில் பரபரப்பு



  • ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு: 7 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]