இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மாமல்லபுரம் இசிஆர் சாலையில் இன்று அதிகாலை பயங்கரம்: கார் மீது கன்டெய்னர் லாரி மோதி 3 பேர் பலி: 3 பேர் உயிர் ஊசல்

10/11/2025 6:39:24 PM
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே இசிஆர் சாலையில் இன்று அதிகாலை கார் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். மேலும், ஒரு பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக இன்று அதிகாலை புதுவை மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி ஒரு சொகுசு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த காரில் ஒரு பெண் உள்பட 6 பேர் இருந்தனர். அதிகாலை 7 மணி அளவில் குன்னத்தூர் அருகே வரும்போது, எதிர்திசையில் வந்த கன்டெய்னர் லாரி வேகமாக  காரின் மீது மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.இவ்விபத்தில் காரில் இருந்த செந்தில் (40), முருகன் (53), ஜெயராமன் (70) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.

மேலும், சுபா (40), மூர்த்தி (60), சுந்தரவரதன் (52) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதைப் பார்த்ததும் கன்டெய்னர் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த சுபா உள்பட 3 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், விபத்தில் இறந்த 3 பேரின் சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர். கன்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சில
  • தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு



  • ‘‘10 தொகுதிகள்தான் என அதிமுக கறார்’’: அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேற முடிவு?: 30ம் தேதி முக்கிய அறிவிப்பு



  • ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புக்கு அதிமுகவினர் படையெடுப்பு: சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் நோயாளிகள் பாதிப்பு



  • நாட்டின் 72வது குடியரசு தினவிழா தமிழகத்தில் கோலாகல கொண்டாட்டம்; கவர்னர் பன்வாரிலால் தேசியக்கொடியை ஏற்றினார்



  • சித்தூர் அருகே நள்ளிரவு கொடூரம்: நிர்வாணப்படுத்தி 2 மகள்கள் நரபலி பேராசிரியர் தம்பதி வெறிச்செயல்



  • 5 முதலாளிகளுக்கு மட்டுமே மோடி ஆதரவு; தமிழக மக்களை பற்றி பாஜவுக்கு அக்கறையில்லை: கரூரில் ராகுல் காந்தி தாக்கு



  • பேச்சுவார்த்தைக்கு குடிநீர் வாரிய அதிகாரிகள் அழைப்பு: சென்னை குடிநீர் ஒப்பந்த லாரிகள் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ்



  • திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாளில் 1 கோடி மனு மீது தீர்வு: மு.க.ஸ்டாலின் அதிரடி வாக்குறுதி



  • கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி 29ம் தேதி கலெக்டர்களுடன் ஆலோசனை



  • பணி நியமனம் கிடைக்காமல் ஏமாற்றம்; அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை ஆசிரியர்கள் முற்றுகை: கோபியில் பரபரப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]