இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

இந்திய விமான படை 88வது ஆண்டு தினம் ராஜ்நாத் சிங் வாழ்த்து

10/8/2025 5:08:06 PM
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

புதுடெல்லி: இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினத்தை முன்னிட்டு விமான படை போர் வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு விமான படை போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இந்திய விமான படை நாட்டின் வான்பகுதியை, எது வந்தபோதிலும், எப்பொழுதும் காக்கும் பணியில் ஈடுபடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நவீனமயப்படுத்துவது மற்றும் உள்நாட்டிலேயே தயாரிப்பது ஆகியவற்றின் வழியே இந்திய விமான படையின் போர் புரியும் திறனை மேம்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.

விமான படையின் போர் வீரர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். 88 ஆண்டு கால அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் திறமையான செயல்பாடு ஆகியவை இந்திய விமான படை கடந்து வந்த பயணத்திற்கு அடையாளமாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், அமித்ஷா வாழ்த்து
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘எங்கள் விமான வீரர்கள், மற்றும் இந்திய விமான படையின் குடும்பங்களை பெருமையுடன் மதிக்கிறோம். நமது வானத்தை பாதுகாப்பதிலும், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடம் நிவாரணத்தில் சிவில் அதிகாரிகளுக்கு உதவுவதிலும் ஐஏஎப் பங்களித்ததற்கு நாடு கடன்பட்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். மற்றொரு வாழ்த்து செய்தியில், ‘ரபேல், அப்பாச்சி மற்றும் சினூக், ஆகியவற்றின் தூண்டுதலுடன் நவீனமயமாக்கல் செயல்முறை ஐஏஎப் இன்னும் வலிமையான மூலோபாய சக்தியாக மாற்றும். அடுத்த ஆண்டுகளில் இந்திய விமான படை அதன் உயர்ந்த அர்ப்பணிப்பு மற்றும் திறனை பராமரிக்கும் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

பிரதமர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘விமான படை தினத்தன்று இந்திய விமான படையின் துணிச்சலான வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நீங்கள் நாட்டின் வானத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது மட்டுமின்றி பேரழிவு காலங்களில் மனிதகுல சேவையில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். மா பாரதியை பாதுகாப்பதற்கான உங்கள் தைரியும், வீரம் மற்றும் அர்ப்பணிப்பு அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்த வாழ்த்து செய்தியில், எங்கள் வானத்தை பாதுகாப்பதில் இருந்து அனைத்து பிரச்னைகளிலும் உதவுவது வரை, எங்கள் துணிச்சலான விமானப்படை வீரர்கள் மிகுந்த தைரியத்துடனும், உறுதியுடனும் தேசத்திற்கு சேவை செய்துள்ளனர்’ என்று கூறியுள்ளார்.

மேலும் சில
  • சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு



  • டிராக்டர் பேரணியில் வன்முறை: விவசாய சங்கங்கள் மீது 22 வழக்குகள் பதிவு: டெல்லியில் 3 அடுக்கு பாதுகாப்பு



  • டெல்லியில் பிரமாண்ட டிராக்டர் பேரணி: சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது போலீஸ் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு



  • 8 ஆண்டுக்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி: திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல்



  • கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து இந்தியா வருகிறது மாடர்னா தடுப்பூசி



  • கண்கவர் கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்புகளுடன் குடியரசு தின விழா கோலாகலம்: டெல்லியில் குடியரசு தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார்



  • தாகூரை போன்று தாடி: மோடியை கிண்டல் செய்யும் சிவசேனா



  • அமெரிக்காவை முந்துகிறது இந்தியா; 8 நாட்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தகவல்



  • நாளை மறுநாள் நடக்கும் குடியரசு தின விழாவிற்கு மத்தியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி: டெல்லியில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை எச்சரிக்கை



  • மே 29ம் தேதி காங். கட்சி தலைவர் தேர்தல்?.. செயற்குழு கூட்டத்தில் முடிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]