இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே ரூ200 கோடி மதிப்பில் ஓய்வறை: இருமாநில முதல்வர்கள் அடிக்கல் நாட்டினர்

9/24/2020 5:05:13 PM
7.5% உள்ஒதுக்கீடு ஒப்புதல் தர தாமதம்: ஆளுநர் மாளிகை திமுக முற்றுகை...மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி கிடையாது: வழிகாட்டு நெறிமுறைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே கர்நாடக மாநில பக்தர்களுக்காக ரூ.200 கோடியில் ஓய்வறை கட்டுவதற்காக இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயில் பின்பகுதியில் உள்ள கர்நாடக சத்திரம் பகுதியில் கர்நாடக மாநில அரசின் சார்பில் அம்மாநில பக்தர்களுக்காக ரூ200 கோடி மதிப்பில் பக்தர்கள் ஓய்வறை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்றிரவு திருமலைக்கு வந்தார். இன்று காலை கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ஆகியோர் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் நாத நீராஞ்சன மண்டபத்தில் உலக நன்மைக்காக நடைபெற்று வரும் சுந்தரகாண்ட பாராயணம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து இருமாநில முதல்வர்களும், கர்நாடக சத்திரம் பகுதியில் பக்தர்கள் ஓய்வறை கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். இதில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி மற்றும் இரு மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். இதையடுத்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் காலை 9.30 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து தடேப்பள்ளி புறப்பட்டு சென்றார். அதேபோல் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் பெங்களூரு புறப்பட்டு சென்றார்.

மேலும் சில
  • உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி கிடையாது: வழிகாட்டு நெறிமுறைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்



  • பீகார் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி : தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு



  • சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்



  • இந்தாண்டு தமிழக அரசு பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்



  • கடும் குளிரில் கொரோனா வேகமாக பரவுவதால் டெல்லி உள்பட 4 மாநிலங்களில் 2ம் அலை?: உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம்



  • போதை பொருள் வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க கோரிக்கை வெடி பொருளுடன் நீதிபதிக்கு கொலை மிரட்டல்: பெங்களூருவில் பெரும் பரபரப்பு



  • டிசம்பருக்குள் 30 கோடி தடுப்பூசி: பொதுமக்களுக்கு மார்ச்சில் விநியோகிக்க முடிவு



  • மோடியின் புகைப்படத்தை போடுவதில் சர்ச்சை: எனது மார்பை கிழித்து பாருங்கள்..!: நிதிஷ்குமாருக்கு சிராக் பஸ்வான் பதிலடி



  • போலீஸ்காரரை அடித்த வழக்கில் பெண் அமைச்சருக்கு 3 மாதம் சிறை: மகாராஷ்டிராவில் பரபரப்பு



  • ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு: 7 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]