இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

‘சிறந்த உழைப்பாளரை இழந்து விட்டோம்’மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடிக்கு மோடி இரங்கல்

9/24/2020 5:02:24 PM
7.5% உள்ஒதுக்கீடு ஒப்புதல் தர தாமதம்: ஆளுநர் மாளிகை திமுக முற்றுகை...மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி கிடையாது: வழிகாட்டு நெறிமுறைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்

புதுடெல்லி: ‘சிறந்த உழைப்பாளர், திறமையான அமைச்சரை இழந்து விட்டோம்’ என்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடியின் மரணத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  14ம் தேதி நாடாளுமன்ற கூட்டம் துவங்க இருந்த நிலையில் முன்னதாக கடந்த 11ம் தேதி அனைத்து எம்பிக்களும், அமைச்சர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அதில் சுரேஷ் அங்கடிக்கு, கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு அதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், கவலைப்பட ஏதும் இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.

தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்து விட்டார் என்று, அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்தனர். கொரோனாவால் உயிரிழந்த முதல் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்கடி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. கர்நாடகத்தை சேர்ந்த அவர், 4வது முறையாக எம்பியாக தேர்வு செய்யப்பட்டு, அமைச்சரவையில் இடம் பிடித்தவர். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவில், ‘சுரேஷ் அங்கடி சிறந்த உழைப்பாளர். கர்நாடாகவில் பாஜவை வளர்த்ததில் அவரது கடுமையான உழைப்பு உள்ளது. மிகத் திறமையான எம்பி மற்றும் அமைச்சரும் கூட. அவரது மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. என்னுடைய நினைவுகள் தற்போது அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்களுடன் உள்ளது. ஓம் சாந்தி’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அங்கடியுடனான தனது புகைப்படத்தையும் மோடி பதிவு செய்துள்ளார்.

மேலும் சில
  • உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி கிடையாது: வழிகாட்டு நெறிமுறைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்



  • பீகார் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி : தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு



  • சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்



  • இந்தாண்டு தமிழக அரசு பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்



  • கடும் குளிரில் கொரோனா வேகமாக பரவுவதால் டெல்லி உள்பட 4 மாநிலங்களில் 2ம் அலை?: உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம்



  • போதை பொருள் வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க கோரிக்கை வெடி பொருளுடன் நீதிபதிக்கு கொலை மிரட்டல்: பெங்களூருவில் பெரும் பரபரப்பு



  • டிசம்பருக்குள் 30 கோடி தடுப்பூசி: பொதுமக்களுக்கு மார்ச்சில் விநியோகிக்க முடிவு



  • மோடியின் புகைப்படத்தை போடுவதில் சர்ச்சை: எனது மார்பை கிழித்து பாருங்கள்..!: நிதிஷ்குமாருக்கு சிராக் பஸ்வான் பதிலடி



  • போலீஸ்காரரை அடித்த வழக்கில் பெண் அமைச்சருக்கு 3 மாதம் சிறை: மகாராஷ்டிராவில் பரபரப்பு



  • ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு: 7 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]