இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பிரபல தயாரிப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு : நடிகை பயல் கோஷ் டுவிட்டால் அதிரும் பாலிவுட்

9/20/2020 5:12:49 PM
சென்னையில் விடியற்காலை முதல் மழை சட்டசபை தேர்தல் குறித்து வடக்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: மாணவர்களுக்கு எதிராக அதிமுக அரசு செய்துவரும் துரோகங்களை மக்களிடம் விளக்கும்படி வலியுறுத்தினார்

மும்பை: பிரபல சினிமா தயாரிப்பாளர் மீது நடிகை பயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளதால், பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை பயல் கோஷ், திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டை சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகை பயல் கோஷ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘அனுராக் காஷ்யப் என்னை பாலியல் ரீதியாக வற்புறுத்தி மிகவும் மோசமாக நடத்தினார். அனுராக் காஷ்யப் மீது பிரதமர் மோடி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனுராக் காஷ்யப்புக்கு பின்னால் உள்ள அவரது கோர முகத்தை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். நான் தற்போது கூறியுள்ள புகாரால் எனக்கு தீங்கு ஏற்படலாம். எனது பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது. தயவுசெய்து எனக்கு உதவுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். 

நடிகை பயல் கோஷ் வெளியிட்ட இந்த டுவீட்டுக்கு அடுத்த சில நிமிடங்களில், அவரது ரசிகர்கள் வேகமாக பதிலளித்து வருகின்றனர். அதில், அனுராக் காஷ்யப்யை கைது செய்ய வேண்டும் என்று ஹேஷ்டேக் உருவாக்கி டிரண்டிங் செய்து வருகின்றனர். மேலும், பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும், இது குறித்து தனது எதிர்வினை கருத்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ஒவ்வொரு குரலும் முக்கியமானது. அனுராக் காஷ்யப்பை கைது செய்யுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார். தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘உங்கள் (பயல் கோஷ்) புகாரை நீங்கள் எனக்கு அனுப்பலாம். இந்த விஷயத்தை தேசிய பெண்கள் ஆணையம் ஆராயும்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்து டுவிட் செய்த பயல் கோஷ், ‘நன்றி, நான் விரைவில் வருவேன்’ என்று கூறியுள்ளார்.

பாலிவுட்டில் அனுராக் காஷ்யப் மீது நடிகை கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவரும் தனது பங்கிற்கு மறுப்பு டுவிட்டுகளை அடுத்தடுத்து பதிவிட்டுள்ளார். அதில், ‘என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து என்னை மவுனமாக்கும் முயற்சியாக இருக்கும். என்னை மவுனமாக்கும் போது, மற்ற பெண்களும் கூட இதில் சேர்வார்கள். கொஞ்சம் அடக்கமாக இருங்கள் மேடம். உங்கள் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. நான் தவறாக நடந்து கொள்ளவில்லை’ என்று தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நடிகை பயல் கோஷ், இந்தி, பஞ்சாபி, ெதலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். இதுதவிர,  2016ம் ஆண்டில் சாத் நிபனா சாதியா என்ற தொலைக்காட்சி சீரியலிலும்  நடித்துள்ளார்.

மேலும் சில
  • மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழு அறிவிப்பு; தமிழக எம்பிக்கள் புறக்கணிப்பு: உறுப்பினராக ஏபிவிபி மாநில தலைவர் சண்முகம் சுப்பையா நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு



  • நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது?... லிட்டருக்கு ரூ6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: துபாயில் இருந்த ரபின்ஸ் ஹமீது கைது



  • 6 மாதங்களுக்கு பிறகு இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதி



  • எல்லையில் சீன படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா-அமெரிக்கா புதிய ஒப்பந்தம்: பாதுகாப்பு, தகவல் பரிமாற்றத்தில் ஒத்துழைப்பு



  • உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி கிடையாது: வழிகாட்டு நெறிமுறைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்



  • பீகார் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி : தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு



  • சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்



  • இந்தாண்டு தமிழக அரசு பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்



  • கடும் குளிரில் கொரோனா வேகமாக பரவுவதால் டெல்லி உள்பட 4 மாநிலங்களில் 2ம் அலை?: உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]