இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு இல்லை; தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஒரேமாதிரி முடிவு

9/19/2020 6:08:15 PM
சென்னையில் விடியற்காலை முதல் மழை சட்டசபை தேர்தல் குறித்து வடக்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: மாணவர்களுக்கு எதிராக அதிமுக அரசு செய்துவரும் துரோகங்களை மக்களிடம் விளக்கும்படி வலியுறுத்தினார்

புதுடெல்லி: மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைபடி நாடு முழுவதும் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்கள் ஒரே முடிவாக, மத்திய அரசு குறிப்பிட்ட தேதியில் பள்ளிகளை திறக்கும் முடிவை ஒத்திவைத்துள்ளன. கொரோனா பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டிருக்கும் பள்ளிகளை நாளை மறுநாள் (செப். 21) முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதாவது, பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்த அனுமதியை அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரியாக பார்க்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு வேறுபடுவதைப் போலவே, பெற்றோரும் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதனால், நாளை மறுநாள் நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு என்பது, ஒத்திவைக்கப்பட்ட ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து யோசிக்கவே முடியும் என்று கல்வித் துறை அறிவித்துள்ளது.

பீகார், மத்திய பிரதேச மாநில அரசுகளும் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த ஆலோசனையையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், கர்நாடகா, உத்தரபிரதேசம், அசாம், உத்தரகாண்ட், ஆந்திரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் 9 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பதில் இறுதி முடிவு எடுக்கவில்லை. டெல்லி அரசு அனைத்து பள்ளிகளும் செப். 30 வரை தொடர்ந்து மூடப்பட வேண்டும். 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு செல்லலாம் என்று தெரிவித்துள்ளது. பீகாரில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே வகுப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரியானா அரசு, கர்னால் மற்றும் சோனிபட் மாவட்டங்களில் உள்ள இரண்டு அரசுப் பள்ளிகளில் 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில் வகுப்புகளைத் தொடங்க முடிவு செய்துள்ளது.

கேரளாவில் இந்த மாதம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரகண்ட் அரசு, இந்த மாத இறுதி வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பள்ளிகள் நாளை மறுநாள் முதல் தன்னார்வ அடிப்படையில் மீண்டும் திறக்கப்பட உள்ளன. குஜராத் அரசு, நாளை மறுநாள் முதல் சாதாரண வகுப்புகளை மீண்டும் தொடங்க முடிவு செய்யவில்லை. அசாமில் 10 - 12ம் வகுப்பு மாணவர்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் தங்கள் பள்ளிகளுக்கு செல்லலாம் என்று அறிவித்துள்ளது. இருப்பினும், மேற்கு வங்கம், கோவா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், பஞ்சாப், ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம் மற்றும் பிற மாநிலங்கள் இன்னும் வகுப்புகள் மீண்டும் தொடங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை.

மேலும் சில
  • மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழு அறிவிப்பு; தமிழக எம்பிக்கள் புறக்கணிப்பு: உறுப்பினராக ஏபிவிபி மாநில தலைவர் சண்முகம் சுப்பையா நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு



  • நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது?... லிட்டருக்கு ரூ6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: துபாயில் இருந்த ரபின்ஸ் ஹமீது கைது



  • 6 மாதங்களுக்கு பிறகு இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதி



  • எல்லையில் சீன படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா-அமெரிக்கா புதிய ஒப்பந்தம்: பாதுகாப்பு, தகவல் பரிமாற்றத்தில் ஒத்துழைப்பு



  • உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி கிடையாது: வழிகாட்டு நெறிமுறைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்



  • பீகார் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி : தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு



  • சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்



  • இந்தாண்டு தமிழக அரசு பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்



  • கடும் குளிரில் கொரோனா வேகமாக பரவுவதால் டெல்லி உள்பட 4 மாநிலங்களில் 2ம் அலை?: உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]