இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பெங்களூர் விமான நிலையம் வழியாகவும் தங்கம் கடத்தல்: சொப்னா கும்பல் குறித்து அதிர்ச்சி தகவல்

9/17/2020 5:57:55 PM
சென்னையில் விடியற்காலை முதல் மழை சட்டசபை தேர்தல் குறித்து வடக்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: மாணவர்களுக்கு எதிராக அதிமுக அரசு செய்துவரும் துரோகங்களை மக்களிடம் விளக்கும்படி வலியுறுத்தினார்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திவரப்பட்ட விவகாரத்தில் நாளுக்கு நாள் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக சுங்க இலாகா, என்ஐஏ, மத்திய அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே தூதரகம் வழியாக துபாயில் இருந்து குரான் கொண்டு வரப்பட்டது. அந்த பார்சலில் தங்கம், வெளிநாட்டு கரன்சி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரள வெளியுறவு துறை அமைச்சர் ஜலீலிடம் 2 முறை மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி உள்ளது. விசாரணையில் அவர் அளித்த விவரங்களை சுங்கஇலாகாவும், என்ஐஏவும் பரிசோதித்து வருகிறது. இதில் பல முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக அமீரக தூதரக பார்சலில் சொப்னா கும்பல் பலமுறையாக 200 கிலோவுக்கு மேல் தங்கம் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இக்கும்பல் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் வழியாகவும் தங்கம் கடத்தி இருக்கலாம் என்றும் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்தும் சுங்கஇலாகா மற்றும் என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சொப்னா, முகம்மது அன்வர் உள்பட 5 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ தீர்மானித்தது. இது தொடர்பாக கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது. ஆனால் சொப்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாலும், முகம்மது அன்வரின் வாரண்டில் சில பிரச்னைகள் இருந்ததாலும் நேற்று முன்தினம் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.

இதையடுத்து மற்ற 3 பேரையும் ஆஜர்படுத்தினர். அவர்களை 3 நாள் காவலில் விசாரிக்க என்ஐஏ நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த நிலையில் நேற்று முகம்மது அன்வர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சொப்னாவின் மருத்துவ பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்படாததால் ேநற்று அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து வரவில்லை. இன்று சொப்னாவை ஆஜர்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சொப்னாவை காவலில் எடுத்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என என்ஐஏ கருதுகிறது. சொப்னா, முகம்மது அன்பவர் உள்பட கைது செய்யப்பட்டுள்ள 5 பேரிடம் இருந்து செல்போன், லேப்டாப், ஹார்டு டிஸ்க் உள்பட டிஜிட்டல் உபகரணங்களை என்ஐஏ கைப்பற்றி இருந்தனர். தற்போது அதில் உள்ள விவரங்கள் முழுவதும் சேகரிக்கப்பட்டுள்ளது. அதில் பல விவரங்களை டெலிட் செய்திருந்தினர்.

அவற்றையும் அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர். இதில், இந்த கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த விஐபிகள் யார் உள்ளிட்ட பல தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவரங்களை வைத்து 5 பேரிடமும் விசாரணை நடத்த என்ஐஏ தீர்மானித்துள்ளது.

மேலும் சில
  • மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழு அறிவிப்பு; தமிழக எம்பிக்கள் புறக்கணிப்பு: உறுப்பினராக ஏபிவிபி மாநில தலைவர் சண்முகம் சுப்பையா நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு



  • நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது?... லிட்டருக்கு ரூ6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: துபாயில் இருந்த ரபின்ஸ் ஹமீது கைது



  • 6 மாதங்களுக்கு பிறகு இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதி



  • எல்லையில் சீன படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா-அமெரிக்கா புதிய ஒப்பந்தம்: பாதுகாப்பு, தகவல் பரிமாற்றத்தில் ஒத்துழைப்பு



  • உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி கிடையாது: வழிகாட்டு நெறிமுறைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்



  • பீகார் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி : தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு



  • சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்



  • இந்தாண்டு தமிழக அரசு பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்



  • கடும் குளிரில் கொரோனா வேகமாக பரவுவதால் டெல்லி உள்பட 4 மாநிலங்களில் 2ம் அலை?: உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]