இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

அரசியல்வாதிகளுக்கு எதிரான 4,600 வழக்குகள் தேக்கம்: உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை ஏற்க தயார்: மத்திய அரசு தகவல்

9/17/2020 5:45:09 PM
சென்னையில் விடியற்காலை முதல் மழை சட்டசபை தேர்தல் குறித்து வடக்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: மாணவர்களுக்கு எதிராக அதிமுக அரசு செய்துவரும் துரோகங்களை மக்களிடம் விளக்கும்படி வலியுறுத்தினார்

புதுடெல்லி: முன்னாள், இந்நாள் எம்பிக்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு எதிரான 4,600 வழக்குகளை விரைந்து விசாரித்து, தீர்ப்பு வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை ஏற்க தயாராக இருக்கிறோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வின் குமார் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘நாடு முழுவதும் முன்னாள், இந்நாள் எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கு எதிராக தொடரப்பட்ட 4,600 குற்ற வழக்குகளின் விசாரணை மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. குறிப்பாக குற்ற வழக்குகளில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட்டால்தான் அரசியல்வாதிகள் அடுத்து வரும் தேர்தல்களில் நிற்க தடை விதிக்கப்படும்.

எனவே அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரித்து, உடனடியாக தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி என்.வி.ராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘முன்னாள், இந்நாள் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிடலாம். அவ்வாறு கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதை மத்திய அரசு வரவேற்கும். இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் எடுக்கும் முடிவுகளுக்கு மத்திய அரசு முழுவதுமாக துணை நிற்கும்’’ என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்றும், அரசியல்வாதிகளுக்கு எதிராக தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஒரு திட்ட வரைவு தயார் செய்யுமாறு நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகளுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் சில
  • மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழு அறிவிப்பு; தமிழக எம்பிக்கள் புறக்கணிப்பு: உறுப்பினராக ஏபிவிபி மாநில தலைவர் சண்முகம் சுப்பையா நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு



  • நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது?... லிட்டருக்கு ரூ6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: துபாயில் இருந்த ரபின்ஸ் ஹமீது கைது



  • 6 மாதங்களுக்கு பிறகு இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதி



  • எல்லையில் சீன படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா-அமெரிக்கா புதிய ஒப்பந்தம்: பாதுகாப்பு, தகவல் பரிமாற்றத்தில் ஒத்துழைப்பு



  • உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி கிடையாது: வழிகாட்டு நெறிமுறைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்



  • பீகார் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி : தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு



  • சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்



  • இந்தாண்டு தமிழக அரசு பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்



  • கடும் குளிரில் கொரோனா வேகமாக பரவுவதால் டெல்லி உள்பட 4 மாநிலங்களில் 2ம் அலை?: உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]