இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

மத்திய கிழக்கு நாடுகளின் வரலாற்று சிறப்புமிக்க இஸ்ரேல்-யுஏஇ-பஹ்ரைன் அமைதி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து

9/16/2020 5:25:44 PM
மாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க 12 பேர் கொண்ட தேசிய பணிக்குழு நியமனம்: உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு: சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு

வாஷிங்டன்: ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), பஹ்ரைன் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான  பிரச்னையை தீர்ப்பதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆர்வம்காட்டி வந்தார். இப்பிரச்னையில் அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்த உடன்பாட்டை மேற்கண்ட நாடுகள் ஏற்றுக் கொண்டன. அதையடுத்து மூன்று நாடுகளின் தலைவர்கள் மத்தியிலான சமாதான ஒப்பந்த நிகழ்ச்சி அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் முன்னிலையில் நேற்று நடந்தது. புதியதாக போடப்பட்ட சமாதான ஒப்பந்தத்தில் பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர் அப்துல்லாதீப் அல் சயானி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் சயீத் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க ஆபிரகாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காக விருந்தளித்தார். இந்த ஒப்பந்தம் 26 ஆண்டுகளில் முதல் அரபு - இஸ்ரேலிய சமாதான ஒப்பந்தமாகும். இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், ‘வரலாற்றின் போக்கை மாற்றுவதற்காக நாங்கள் ஒன்றிணைந்து வந்துள்ளோம். பல தசாப்தங்களாக பிளவு மற்றும் மோதல்களில் சிக்கியிருந்த மத்திய கிழக்கு நாடுகள் புதிய விடியலை காணும். இந்த மூன்று நாடுகளின் தலைவர்களின் மிகுந்த தைரியமான முடிவிற்கு நன்றி. நாங்கள் அனைத்து மதங்களையும், அதன் பின்னணிகளையும் கொண்ட மக்களுடன் அமைதி மற்றும் செழிப்பான வளர்ச்சியை விரும்புகிறோம்’ என்றார்.

இந்த ஒப்பந்தங்களின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் இஸ்ரேலில் தூதரகங்களை நிறுவுகின்றன. தூதர்களை பரிமாறிக்கொள்ளும், சுற்றுலா, வர்த்தகம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இஸ்ரேலுடன் ஒத்துழைத்து இணைந்து செயல்படும். இந்த ஒப்பந்தங்கள் மூலம், ஒட்டுமொத்த பிராந்தியத்தில் அமைதிக்கான அடித்தளம் அமையும் என சர்வதேச பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் சில
  • கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே உயிரி ஆயுதங்களுடன் 3ம் உலகப்போருக்கு தயாரான சீனா: அமெரிக்க புலனாய்வு துறை அறிக்கையில் பகீர்



  • கொரோனாவின் பிடியில் அமெரிக்கா சிக்கி தவித்த போது இந்தியா உதவியது போல் நாங்களும் உதவுவோம்!...அதிபர் ஜோ பிடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் டுவிட்



  • சீன பெண் இயக்குநர் இயக்கிய ‘நோமேட்லேண்ட்’ படத்துக்கு 3 ஆஸ்கர் விருது: சிறந்த நடிகையாக பிரான்சஸ் மெட்டோர்மெண்ட் தேர்வு



  • சீன தயாரிப்பு தடுப்பூசி போட்ட நிலையில் இம்ரான்கான் மனைவிக்கும் கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு



  • இங்கிலாந்து பிரதமர் இந்தியா வருகை..! அதிகாரிகள் அட்வான்ஸ் குழு நாளை காலை தமிழகம் வருகிறது



  • ரத்த கட்டு சம்பவங்களை தொடர்ந்து 9 நாடுகளில் ஆஸ்டிரா தடுப்பூசிக்கு தடை: உலக சுகாதார அமைப்பு விளக்கம்



  • ‘நாசா’ அனுப்பிய விண்கலம் செவ்வாய்கிரகத்தில் தரையிறங்கியது



  • தெற்கு பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை



  • வாஷிங்டனில் கோலாகல விழா ‘அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பேன்’.. அதிபராக பதவியேற்ற பின் ஜோ பிடன் உரை



  • வன்முறையை தூண்டும் பதிவுகளால் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்: பேஸ்புக் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]