இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

வேலூர் மாவட்டத்தில் பாரத பிரதமர் கிசான் திட்ட முறைகேடு; கணினி ஆபரேட்டர் 8 பேர் பணி நீக்கம்

9/16/2020 5:12:02 PM
நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு; விவசாயிகளின் குரல்களை அடக்கும் ஒன்றிய அரசு: டிராக்டர் ஓட்டிக்கொண்டு வந்த ராகுல் ஆவேசம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 968 எஸ்ஐகளுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பாரத பிரதமர் கிசான் திட்டத்தில் 3,700 பேரைமுறைகேடாக சேர்த்து 1.20 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பணத்தை வசூலிக்கவும், மேலும் முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய ஒவ்வொரு வட்டார ஒன்றியத்திற்கும் ஒரு துணை ஆட்சியர் தலைமையில் வருவாய், வேளாண்மை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டார வாரியாக சென்று வங்கி எண்களை வைத்து அந்தந்த பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை 61 லட்சம் திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது. பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், வேலூர் மாவட்டத்தில் இம்முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய வேளாண் உதவி அலுவலர்கள், ஒப்பந்த கணினி ஆபரேட்டர்கள் 17 பேர் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் 8 ஒப்பந்த கணினி ஆபரேட்டர்களை பணி நீக்கம் செய்து வேளாண் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் 8 வேளாண் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்காக வேளாண் செயலாளருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நடைபெற்றுள்ள மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதால், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

தர்மபுரி நபர் திருப்பத்தூரில் முறைகேடு

திருப்பத்தூர் மாவட்டத்தில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரதத்தில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த நபருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த நபர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வேளாண் அதிகாரி மற்றும் ஒப்பந்த கணினி ஆபரேட்டர்களின் உதவியோடு முறைகேடு செய்துள்ளாரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • புதிதாக தேர்வு செய்யப்பட்ட 968 எஸ்ஐகளுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்



  • 10,906 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு உடல் தகுதி தேர்வு இன்று தொடங்கியது



  • உட்கட்சி பூசல், பதவி போட்டி, சசிகலா விவகாரம்; மோடியுடன் ஓபிஎஸ், இபிஎஸ் சந்திப்பு: அமித்ஷா, நட்டாவையும் சந்தித்து பேச திட்டம்



  • எடப்பாடியுடன் மோதல் எதிரொலி; மோடியுடன் ஓபிஎஸ் நாளை சந்திப்பு



  • மாமல்லபுரம் அருகே சாலை விபத்து: நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்; பெண் இன்ஜினியர் பரிதாப பலி



  • ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணம் பெற கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு



  • தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ல் கலைஞர் திருவுருவ படத்திறப்பு விழா: ஜனாதிபதி திறந்து வைக்கிறார்; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு



  • அதிமுக ஆட்சியில் முறைகேடு புகார் எதிரொலி; சென்னை மாநகராட்சியில் 660 ஒப்பந்தங்கள் ரத்து: ரூ43 கோடி இழப்புகள் தடுப்பு



  • அவதூறு பேச்சு வழக்கில் தேடப்பட்ட பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையா கைது



  • கொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பொது நூலகங்கள் இன்று முதல் இயங்க அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]