இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களில் அத்துமீறினால் கைது, ரெய்டுக்கு ‘வாரன்ட்’ தேவையில்லை; சிறப்பு பாதுகாப்பு படைக்கு கூடுதல் அதிகாரம்

9/15/2020 5:12:46 PM
வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

லக்னோ: அலகாபாத் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் உத்தரபிரதேசத்தில் சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்படும் என உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநில நீதிமன்றங்களில் கடந்த சில ஆண்டுகளாக கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கையில் ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கியுடன் நுழையும் மர்ம நபர்கள் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இதனால் நீதிபதிகள், காவல்துறையினர் உள்ளிட்ட சிலர் நீதிமன்ற வளாகத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. நீதிபதிகள் மற்றும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிறப்பு படையினரை பணியமர்த்த நீதிமன்றம் மாநில அரசுக்கு அறிவுறுத்தியது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்படும் என உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. இந்தக் குழுவில் 9,919 பேர் பணியமர்த்தப்படவிருக்கின்றனர். உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள், மாவட்ட நிர்வாக அலுவலகங்கள், மெட்ரோ ரயில், விமான நிலையங்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்களில் சிறப்பு பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடவுள்ளனர். இந்தப் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு பாதுகாப்பை பலப்படுத்துவதே சிறப்பு பாதுகாப்பு படையின் பணியாகும். மேலும், வாரன்ட் அல்லது நீதிமன்ற உத்தரவு இல்லாமல் யாரையும் தேடவோ, கைது செய்யவோ இந்த சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் உள்ளது. இதுதொடர்பாக உத்தரபிரதேச அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் குமார் அவஸ்தி கூறுகையில், ‘மாநிலத்தில் அனைத்து நீதிமன்றங்களின் பாதுகாப்பை பலப்படுத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 1,747 கோடி ரூபாய் செலவில், எஸ்எஸ்எப் எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை உருவாக்கப்படுகிறது. இதற்கான மசோதா, சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. இப்பிரிவிற்கு, வாரன்ட் இல்லாமல் சோதனை மற்றும் கைது செய்யும் அதிகாரம் வழங்கப்படும். இப்பிரிவை மூன்று மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 1,913 பேருடன், ஐந்து பட்டாலியன்களாக அமைக்கப்படும் இந்த சிறப்பு பாதுகாப்பு படையானது, பின்னர் 9,919 பேருடன் விரிவுபடுத்தப்படும்’என்றார்.

மேலும் சில
  • வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு



  • வேளாண் மசோதா நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ கூட்டணியில் இருந்து விலகியது சிரோன்மணி; 22 ஆண்டுகால உறவு முறிந்ததாக மாஜி அமைச்சர் அறிவிப்பு



  • உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்



  • போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை தீபிகா படுகோன் ஆஜர்: அடுத்தடுத்து நடிகைகள் சிக்குவதால் பரபரப்பு



  • பாஜக கூட்டணிக்கு வந்த மாஜி முதல்வருக்கு பரிசு மன்ஜிக்கு ‘இசட் பிளஸ்’ பஸ்வானுக்கு ‘இசட்’: பீகார் தேர்தலில் ஆளும் கூட்டணியில் சலசலப்பு



  • கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அக். 28, நவ. 3, நவ. 7ல் வாக்குப்பதிவு; நவ. 10ல் ரிசல்ட் 65 தொகுதி இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிப்பு



  • கலாச்சார ஆய்வுக் குழுவை கலைத்திடக் கோரி குடியரசு தலைவருக்கு 32 எம்பிக்கள் கடிதம்



  • திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே ரூ200 கோடி மதிப்பில் ஓய்வறை: இருமாநில முதல்வர்கள் அடிக்கல் நாட்டினர்



  • ‘சிறந்த உழைப்பாளரை இழந்து விட்டோம்’மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடிக்கு மோடி இரங்கல்



  • பீகார் போலீஸ் டிஜிபி விருப்ப ஓய்வு: அரசியலில் குதித்து தேர்தலில் போட்டியிட திட்டம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]