இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தமிழகம், கேரளத்தில் ரூ.1600 கோடி சுருட்டல்; பாப்புலர் நிதிநிறுவன மோசடியை சிபிஐ விசாரிக்கும்: முதல்வர் பினராயி விஜயன் தகவல்

9/15/2020 5:04:10 PM
வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாப்புலர் நிதிநிறுவனம் தொடங்கப்பட்டது. நகைக்கடன், பணப்பரிமாற்றம் உட்பட பல சேவைகளை இந்த நிறுவனம் வழங்கியது. நாளடைவில் இந்த நிறுவனம் கேரளா முழுவதும் செயல்பட தொடங்கியது. இந்த நிறுவனத்தில் ஏராளமானோர் பணம் கட்டினர். தொடர்ந்து தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் கிளைகள் தொடங்கப்பட்டன. இந்த மாநிலங்களில் 238 கிளைகள் உள்ளன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கிளைகள் உள்ளன.

இந்த நிலையில் இந்த நிதிநிறுவனத்தில் முதலீடு செய்திருந்தவர்களுக்கு திடீரென முதிர்ச்சித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை தொடங்கிய ஒருசில நாட்களிலேயே அனைத்து கிளைகளும் அதிரடியாக மூடப்பட்டன. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் டேனியல், அவரது மனைவி மற்றும் 2 மகள்கள் தலைமறைவாயினர். போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற 2 மகள்களும் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும் கோட்டயம் மாவட்டம் சங்கணாச்சேரியில் வைத்து உரிமையாளர் டேனியல் மற்றும் அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிறுவனம் ரூ.1,600 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. உரிமையாளரின் நெருங்கிய உறவினர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ளனர்.

மோசடி பணம் இவர்களது வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மோசடி பணத்தை பினாமி பெயர்களில் வெளிநாட்டு வங்கிகளிலும், பல நாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிபிஐ மற்றும் இன்டர்போல் விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். இதற்கிடையே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க நடவடிக்கை ேகட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் ெசய்யப்பட்டன. இந்த நிலையில் கேரளா மற்றும் வெளிமாநிலங்களிலும் பாப்புலர் நிதிநிறுவனம் பெருமளவு மோசடி செய்துள்ளதால், இந்த மோசடி குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க நடவடிக்ைக எடுக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் ெதரிவித்துள்ளார்.

மேலும் சில
  • வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு



  • வேளாண் மசோதா நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ கூட்டணியில் இருந்து விலகியது சிரோன்மணி; 22 ஆண்டுகால உறவு முறிந்ததாக மாஜி அமைச்சர் அறிவிப்பு



  • உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்



  • போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை தீபிகா படுகோன் ஆஜர்: அடுத்தடுத்து நடிகைகள் சிக்குவதால் பரபரப்பு



  • பாஜக கூட்டணிக்கு வந்த மாஜி முதல்வருக்கு பரிசு மன்ஜிக்கு ‘இசட் பிளஸ்’ பஸ்வானுக்கு ‘இசட்’: பீகார் தேர்தலில் ஆளும் கூட்டணியில் சலசலப்பு



  • கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அக். 28, நவ. 3, நவ. 7ல் வாக்குப்பதிவு; நவ. 10ல் ரிசல்ட் 65 தொகுதி இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிப்பு



  • கலாச்சார ஆய்வுக் குழுவை கலைத்திடக் கோரி குடியரசு தலைவருக்கு 32 எம்பிக்கள் கடிதம்



  • திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே ரூ200 கோடி மதிப்பில் ஓய்வறை: இருமாநில முதல்வர்கள் அடிக்கல் நாட்டினர்



  • ‘சிறந்த உழைப்பாளரை இழந்து விட்டோம்’மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடிக்கு மோடி இரங்கல்



  • பீகார் போலீஸ் டிஜிபி விருப்ப ஓய்வு: அரசியலில் குதித்து தேர்தலில் போட்டியிட திட்டம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]