இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மும்பையில் இருந்து அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு ‘கால்சென்டர்’ மூலம் போதை மருந்து, செக்ஸ் ‘பூஸ்டர்’ சப்ளை; 26 பெண்கள் உட்பட 100 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

9/14/2020 5:33:26 PM
வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மும்பை: மும்பையில் செயல்படும் கால்சென்டர் மூலம் போதை மருந்து, செக்ஸ் ‘பூஸ்டர்’ போன்றவற்றை அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சப்ளை செய்த விவகாரத்தில் 26 பெண்கள் உட்பட 100 பேரை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகரான மலாட் நகரில் உள்ள மார்வேயில் செயல்படும் போலி கால்சென்டர் நடத்தும் ஆசாமிகள் சிலர், வெளிநாட்டவர்களிடம் பணம் பறித்து வருவதாக மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. அதையடுத்து ஆக. 29ம் தேதி மலாட் ஜும்மா மார்க்கெட் பகுதியில் உள்ள கட்டிடம் மற்றும் மார்வே ரோட்டில் உள்ள செஜ் பிளாசா ஆகிய இடங்களில் ேபாலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் 5 போலி கால்சென்டர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலி கால் சென்டர்களை நடத்திய ஜிஷான் அன்சாரி (21), பைசன் பாலிம் (23), ஷாபாஸ் இக்பால் கரிபோடி (37), நிதின் ரானே (42), முகமது சயீத் (29), கணேஷ் ராஜ்புத் (27) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

இவர்கள் அமெரிக்கா மற்றும் கனடா மக்களிடம் தங்களை அந்நாட்டு வருவாய் அதிகாரிகள் என்றும், குடியுரிமை அதிகாரிகள் என கூறியும் வரி செலுத்தாமல் இருப்பதாக மிரட்டி அவர்களிடம் பணம் பறித்துள்ளனர். மேலும் இவர்கள், கால்சென்டர் பணியில் 81 ஆண்கள் மற்றும் 26 பெண்களை வேலைக்கு அமர்த்தி பணப்பறிப்பு வேலைகளில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத்தவிர அவர்கள் வலி நிவாரண மாத்திரைகள், செக்ஸ் பூஸ்டர் (ஊக்குவிப்பு) மருந்துகள் போன்றவற்றை வெளிநாட்டில் இருந்து பெற்று மும்பையில் சட்டவிரோதமாக விற்று பணம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது. இவர்களிடம் வேலை பார்த்து வந்த 26 பெண்கள் உட்பட 100 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து  துணை போலீஸ் கமிஷனர் (குற்றம்) நந்த்குமார் தாக்கூர் கூறுகையில், ‘மும்பை காவல்துறையின் குற்ற புலனாய்வு பிரிவு (சிஐயு) அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐந்து கால் சென்டர்களில் வெளிநாட்டினரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

ஆன்லைனில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்தல், செக்ஸ் மாத்திரைகள், வயக்ராவுக்கு மாற்றாக இருக்கும் பிற மருந்துகள் வெளிநாடுகளுக்கு சப்ளை செய்துள்ளனர். இவர்கள் வெளிநாட்டினரை அணுகி, நிலுவையில் உள்ள அபராதங்களை செலுத்தச் சொல்வார்கள். எடுத்துக்காட்டாக, செலுத்த வேண்டிய அபராதம் 2,000 அமெரிக்க டாலர்கள் என்றால், கால் சென்டர் ஊழியர் அதை பாதி தொகையை செலுத்தினால் அபராதம் விலக்கிக் கொள்ளப்படும் என்று கூறுவார். பின்னர் அவர்கள் வால்மார்ட் அல்லது ஏதேனும் ஒரு நிறுவனத்தின் பரிசு கூப்பன்களை வாங்கி அவர்களின் பாஸ்வேர்டை கேட்பார்கள். அவர்கள் பாஸ்வேர்டை சொன்னதும், அதிலிருந்து பல லட்சம் ரூபாயை எடுத்துக் கொள்வர். சட்டவிரோதமாக கூரியர் மூலம் அமெரிக்காவிற்கு பாலியல் தூண்டுதல்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்துள்ளனர்’ என்றார்.

மேலும் சில
  • வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு



  • வேளாண் மசோதா நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ கூட்டணியில் இருந்து விலகியது சிரோன்மணி; 22 ஆண்டுகால உறவு முறிந்ததாக மாஜி அமைச்சர் அறிவிப்பு



  • உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்



  • போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை தீபிகா படுகோன் ஆஜர்: அடுத்தடுத்து நடிகைகள் சிக்குவதால் பரபரப்பு



  • பாஜக கூட்டணிக்கு வந்த மாஜி முதல்வருக்கு பரிசு மன்ஜிக்கு ‘இசட் பிளஸ்’ பஸ்வானுக்கு ‘இசட்’: பீகார் தேர்தலில் ஆளும் கூட்டணியில் சலசலப்பு



  • கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அக். 28, நவ. 3, நவ. 7ல் வாக்குப்பதிவு; நவ. 10ல் ரிசல்ட் 65 தொகுதி இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிப்பு



  • கலாச்சார ஆய்வுக் குழுவை கலைத்திடக் கோரி குடியரசு தலைவருக்கு 32 எம்பிக்கள் கடிதம்



  • திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே ரூ200 கோடி மதிப்பில் ஓய்வறை: இருமாநில முதல்வர்கள் அடிக்கல் நாட்டினர்



  • ‘சிறந்த உழைப்பாளரை இழந்து விட்டோம்’மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடிக்கு மோடி இரங்கல்



  • பீகார் போலீஸ் டிஜிபி விருப்ப ஓய்வு: அரசியலில் குதித்து தேர்தலில் போட்டியிட திட்டம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]