இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமை நீதிபதிக்கு கடிதம்

9/14/2020 5:28:09 PM
வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

சென்னை: உயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸ்  மூலம்  நீதி வழங்கும் நீதிபதிகள் என்று கருத்து தெரிவித்த சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பயந்து மாணவர்களின் தற்கொலை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தே வருகின்றது. மேலும், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பெற்றோர்கள், அரசியல் கட்சியினர் என பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்தநிலையில் நடிகர் சூர்யா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது.

தேர்வெழுத  போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்குப் பதிலாக ஆறுதல் சொல்வதைப் போல அவலம் எதுவுமில்லை. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்ப்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது. அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச்  சட்டமாகக் கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின்  நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.  இவ்வாறு அந்த  அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நேற்று இரவே வைரலாகியது. இந்தநிலையில், இதனை பார்த்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் நடிகர் சூர்யா பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும்? என்று உத்தரவிடுகிறது. என கூறப்பட்டுள்ளது. எனவே உயிருக்கு பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத சொல்வதாக சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மையையும், சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. சூர்யாவின் கருத்து மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளது. நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. எனவே சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிபடுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

மேலும் சில
  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



  • மக்களை வஞ்சிக்கும் பாஜ, அதிமுக அரசுகளின் கூடாரம் விரைவில் காலியாகும்: தேர்தல் மூலம் பாடம் புகட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி



  • மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம்



  • மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கவே அக்டோபர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு; செங்கோட்டையன் பேட்டி



  • வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்; காஞ்சிபுரம் வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னேரிக்கரையில் பிரம்மாண்ட வரவேற்பு



  • அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் வேட்பாளர் பிரச்னை; இபிஎஸ்- ஓபிஎஸ் நாளை பலப்பரீட்சை: 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்பு ஆதரவாளர்கள் திரள்வதால் போலீஸ் குவிப்பு



  • 72 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் பாடகர் எஸ்பிபி உடல் அடக்கம்: தாமரைப்பாக்கத்தில் திரையுலகினர், ரசிகர்கள் இறுதி அஞ்சலி



  • வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை மற்றும் புறநகரில் விவசாயிகள்: சாலை மறியல் - தீவிர போராட்டம்



  • மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை: செட் ஆகாது என்றால் கட்டாயம் அல்ல: தமிழக வேளாண் துறை அமைச்சர், செயலாளர் மீண்டும் உறுதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]