இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி நாளை முதல் மக்களுக்கு விநியோகம்: உலகின் முதல் நாடாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு

9/13/2020 5:44:29 PM
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?... தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு சென்னை, இம்பால், ராஞ்சியில் என்ஐஏ கிளை ஏன்?

மாஸ்கோ: கொரோனா வைரசை தடுக்க மக்கள் பயன்பாட்டுக்காக, உலகில் முதன்முறையாக ரஷ்யா தனது தடுப்பூசி விநியோகத்தை தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சீனாவின் வூஹானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று, கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு ேமலாக உலக மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கி வருகிறது. தடுப்பு மருந்து கண்டறியப்படாததால், லட்சக்கணக்கான மக்கள் இறந்தும், கோடிக்கணக்கான மக்கள் நோய் தொற்றால் பாதித்தும் வருகின்றனர். நோயை தடுத்து நிறுத்துவதற்காக உலகின் பல நாடுகள் தடுப்பூசி கண்டறிவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரஷ்யாவில் ‘ஸ்புட்னிக்-5’ என்ற தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியை ரஷ்யா முறைப்படி பதிவு செய்துள்ளது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற 3வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையும் தொடங்கி உள்ளது. இந்த சோதனையில் கிட்டத்தட்ட 31,000 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போட்டு சோதித்துள்ளனர். இதற்கிடையே, கொரோனா தொற்று பாதிக்காத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பயன்பாட்டுக்காக ‘ஸ்புட்னிக்-5’ தடுப்பூசியின் விநியோகம் தொடங்கி உள்ளது. இதை ரஷ்ய சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ கூறுகையில், ‘கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பூசியின் முதல் தொகுதி ரஷ்ய பிராந்தியங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல் விநியோக திட்டத்தின்படி, மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக அறியப்படும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி முதலில் போடப்படும். இந்த தடுப்பூசி திங்கள்கிழமை (நாளை) முதல் வழங்கப்படும். நாட்டில் உள்ள 85 பிராந்தியங்களுக்கு தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது’ என்றார். முன்னதாக கடந்த ஆக. 11ம் தேதி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உலகின் முதல் கோவிட் -19 தடுப்பூசியாக ‘ஸ்புட்னிக் - 5’ என்று பதிவு செய்துள்ளதாக அறிவித்தார். இதை மாஸ்கோவின் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனம் தயாரிப்பதாக தெரிவித்தார். இருந்தும், தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு நாடுகளும் விமர்சித்து வருகின்றன. அதேநேரத்தில், இந்த மாத தொடக்கத்தில், பிரிட்டிஷ் மருத்துவ இதழான ‘தி லான்செட்’ ரஷ்ய சுகாதார அமைச்சின் ‘ஸ்புட்னிக் - 5’ தடுப்பூசி குறித்து ஆய்வு கட்டுரையை வெளியிட்டது. அதில், இந்த தடுப்பூசி 100 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்துள்ளது. அதனால், உலகிலேயே ரஷ்யாவில்தான் கொரோனா தடுப்பூசி முதன்முதலாக மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் சில
  • ஐ.நா-வில் பாக். பிரதமர் பேசும்போது இந்திய பிரதிநிதி வெளிநடப்பு: பிரதமர் மோடி இன்று மாலை உரை



  • உக்ரைனில் தரையிறங்கிய போது சோகம் விமான விபத்தில் 25 பேர் பலி



  • இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி; மனிதர்களுக்கு செலுத்தி சோதனை: 2000 பேர் பரிசோதனைக்கு ஒப்புதல்



  • தற்போது ஆராய்ச்சிகளில் உள்ள எந்த கொரோனா தடுப்பூசியும் பலன்தராது: உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை



  • அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொடிய விஷ ‘பார்சல்’: புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை



  • இது டிரெய்லர்தான்... மெயின் பிக்சர் இனிமேல்தான்... கொரோனாவின் 2வது அலை நிச்சயம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை



  • மத்திய கிழக்கு நாடுகளின் வரலாற்று சிறப்புமிக்க இஸ்ரேல்-யுஏஇ-பஹ்ரைன் அமைதி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து



  • மாஸ்கோவில் இந்திய-சீன அமைச்சர்கள் சந்திப்பு: எல்லை பதற்றத்தை குறைக்க 5 அம்ச திட்டம்: சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கை



  • சீன மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களின் விசா ரத்து: அமெரிக்கா அதிரடி



  • ஆக்ஸ்போர்டு பல்கலை தடுப்பூசி சோதனை திடீர் நிறுத்தம்: உலகளவிலான 3ம் கட்ட சோதனையில் பின்னடைவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]