இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி சோதனை நிறுத்தம்: சீரம் நிறுவனத்துக்கு மருந்து கட்டுப்பாட்டு துறை உத்தரவு

9/11/2025 5:03:43 PM
சென்னையில் விடியற்காலை முதல் மழை சட்டசபை தேர்தல் குறித்து வடக்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: மாணவர்களுக்கு எதிராக அதிமுக அரசு செய்துவரும் துரோகங்களை மக்களிடம் விளக்கும்படி வலியுறுத்தினார்

புதுடெல்லி: ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை விவகாரத்தால், இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி சோதனை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - அஸ்ட்ராஜெனெகா  நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி ஒரு தன்னார்வலரின் உடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியதால், தடுப்பூசி பரிசோதனைகள் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஆக்ஸ்ேபார்டு - அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்துடன் இணைந்து ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசியை கண்டறிந்து இந்தியாவில் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ​​இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு துறை (டிசிஜிஐ) தலைவர் டாக்டர் வி.ஜி.சோமணி வெளியிட்ட அறிவிப்பில், ‘சீரம் நிறுவனம் பரிசோதனைக்கு உட்படுத்திய ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பரிசோதனையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டாம்’ என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ‘ஆக்ஸ்ேபார்டு நிறுவனத்தின் தடுப்பூசியானது புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளதால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் மருத்துவ பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, சீரம் நிறுவனம் பரிசோதனைக்கு உட்படுத்திய ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பரிசோதனையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீரம் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘நாங்கள் நிலைமையை மறுபரிசீலனை செய்கிறோம். ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனங்கள் மீண்டும் பரிசோதனையை தொடங்கும் வரை இந்தியா சோதனைகளை நிறுத்தி வைக்கிறோம். இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைவரின் அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். மேலும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது’ என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம் சீரம் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘எங்களது சோதனைகளில் எந்தவொரு பிரச்னையும் ஏற்படவில்லை. சோதனைகள் தொடர்ந்து நடக்கிறது’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழு அறிவிப்பு; தமிழக எம்பிக்கள் புறக்கணிப்பு: உறுப்பினராக ஏபிவிபி மாநில தலைவர் சண்முகம் சுப்பையா நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு



  • நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது?... லிட்டருக்கு ரூ6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: துபாயில் இருந்த ரபின்ஸ் ஹமீது கைது



  • 6 மாதங்களுக்கு பிறகு இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதி



  • எல்லையில் சீன படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா-அமெரிக்கா புதிய ஒப்பந்தம்: பாதுகாப்பு, தகவல் பரிமாற்றத்தில் ஒத்துழைப்பு



  • உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி கிடையாது: வழிகாட்டு நெறிமுறைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்



  • பீகார் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி : தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு



  • சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்



  • இந்தாண்டு தமிழக அரசு பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்



  • கடும் குளிரில் கொரோனா வேகமாக பரவுவதால் டெல்லி உள்பட 4 மாநிலங்களில் 2ம் அலை?: உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]