இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

சீன மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களின் விசா ரத்து: அமெரிக்கா அதிரடி

9/10/2025 6:28:02 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

வாஷிங்டன்: சீனாவை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் விசாக்களை திடீரென அதிரடியாக ரத்து செய்து, அமெரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவை சேர்ந்த 36 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் ஆராய்ச்சி மாணவர்கள் ஏராளமானோரும் அமெரிக்காவில் தங்கி, அங்குள்ள பல்கலைக்கழகங்களில் தங்கள் ஆராய்ச்சி படிப்புகளை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சீனாவை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் விசாக்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் போன்ற பல்வேறு பிரிவுகளை சேர்ந்த உயர் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், ரகசிய ஆய்வுத் தகவல்கள் திருடப்படுவதைத் தடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அதிகாரி சாட் உல்ஃப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘‘அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலைப் பட்டக்கல்வி பயின்று வரும் மாணவர்களின் விசாக்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டதாக சீனாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திடமிருந்து அந்நாட்டு மாணவர்களுக்கு முறைப்படி இன்று தகவல் அனுப்பப்பட உள்ளது.

அமெரிக்காவுக்குப் பயணம் செய்ய அவர்கள் இனி புதிதாக விசாக்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இங்கு ஆராய்ச்சி துறைகளில் ஈடுபட்டு, கல்வியை முடித்து செல்லும் மாணவர்கள், சீனா சென்று ராணுவப் பணிகளில் சேர்கிறார்கள். இதனால் எங்கள் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது’’ என்று தெரிவித்துள்ளார். இது தவிர சீன ராணுவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் ஆயிரத்துக்கும் அதிகமான சீனர்களின் விசாக்களையும் ரத்து செய்து, அமெரிக்கா இன்று உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் (8ம் தேதி) இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், தங்கள் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை அறிந்து சீனாவை சேர்ந்த மாணவர்கள் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளனர். அமெரிக்காவின் இந்த முடிவு, மாணவர்களின் எதிர்காலத்தைத்தான் கேள்விக்குறியாக்கி விட்டது என்று, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் கல்வி முறைக்கு மாறி வருவதால், இனிமேல் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களில் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும் என கடந்த ஜூன் மாதமே அமெரிக்கா அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் வேளையில், டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசிடம் இருந்து, இம்மாதிரி அதிரடி உத்தரவுகள் அடுத்தடுத்து வரக்கூடும் என்று நடுநிலையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் சில
  • ஐ.நா-வில் பாக். பிரதமர் பேசும்போது இந்திய பிரதிநிதி வெளிநடப்பு: பிரதமர் மோடி இன்று மாலை உரை



  • உக்ரைனில் தரையிறங்கிய போது சோகம் விமான விபத்தில் 25 பேர் பலி



  • இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி; மனிதர்களுக்கு செலுத்தி சோதனை: 2000 பேர் பரிசோதனைக்கு ஒப்புதல்



  • தற்போது ஆராய்ச்சிகளில் உள்ள எந்த கொரோனா தடுப்பூசியும் பலன்தராது: உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை



  • அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொடிய விஷ ‘பார்சல்’: புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை



  • இது டிரெய்லர்தான்... மெயின் பிக்சர் இனிமேல்தான்... கொரோனாவின் 2வது அலை நிச்சயம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை



  • மத்திய கிழக்கு நாடுகளின் வரலாற்று சிறப்புமிக்க இஸ்ரேல்-யுஏஇ-பஹ்ரைன் அமைதி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து



  • ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி நாளை முதல் மக்களுக்கு விநியோகம்: உலகின் முதல் நாடாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு



  • மாஸ்கோவில் இந்திய-சீன அமைச்சர்கள் சந்திப்பு: எல்லை பதற்றத்தை குறைக்க 5 அம்ச திட்டம்: சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கை



  • ஆக்ஸ்போர்டு பல்கலை தடுப்பூசி சோதனை திடீர் நிறுத்தம்: உலகளவிலான 3ம் கட்ட சோதனையில் பின்னடைவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]