அருவியில் உடை மாற்றிய பெண்களிடம் சில்மிஷம் செய்த 2 ராணுவ வீரர்கள் அதிரடி கைது
9/8/2025 6:28:45 PM
திருப்பத்தூர்: அருவியில் குளித்துவிட்டு உடை மாற்றிய பெண்களிடம் சில்மிஷம் செய்த 2 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜங்கலாபுரத்தை சேர்ந்தவர் சரவணன்(49). மல்லகுண்டா விஏஓவாக உள்ளார். இவரது நண்பர்கள், ராணுவ வீரர்கள் ராஜீவ்(36), சக்தி மற்றும் ராமச்சந்திரன் (35), ராஜ்குமார்(29), பார்த்தீபன்(39) ஆகியோர் நேற்று முன்தினம் திருப்பத்தூர் அடுத்த ஜலகாம்பாறை அருவிக்கு சென்றனர். அங்கு குளித்துவிட்டு அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. குடி போதையில் இருந்த 6 பேரும், நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு அங்குள்ள அறையில் உடை மாற்றிக்காண்டிருந்த பெண்களிடம் ஆபாசமாக பேசியபடி சில்மிஷத்தில் ஈடுபட்டார்களாம்.
இதுகுறித்துதகவலறிந்த குரிசிலாப்பட்டு போலீசார், எச்சரித்துள்ளனர்.அதற்கு சரவணன், ‘நான் யார் தெரியுமா? நான் விஏஓ, என்னை எதுவும் செய்ய முடியாது’ என்று மிரட்டினாராம்.இதையடுத்து பெருமாப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் ராஜீவ்காந்தி கொடுத்த புகாரின் பேரில் குரிசிலாப்பட்டு போலீசார், பெண்களிடம் போைதயில் அநாகரீகமாக நடந்து கொண்ட விஏஓ சரவணன், அவரது நண்பர்களான 2 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுபற்றிய தகவலறிந்த கலெக்டர் சிவன்அருள் உத்தரவுப்படி, பொது இடத்தில் பெண்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதுடன், கொரோனா முன்னெச்சரிக்கையாக முகக்கவசமும் அணியாமல் இருந்ததாக கூறி மல்லகுண்டா கிராம நிர்வாக அலுவலர் சரவணனை சஸ்பெண்ட் செய்து சப்-கலெக்டர் முனீர் உத்தரவிட்டார்.மேலும் ராணுவ வீரர்கள் 2 பேர் தொடர்பாக அவர்களது ராணுவ மேலிடத்துக்கும் காவல்துறை மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.