அரசு பஸ் டிரைவருக்கு அடி; கட்டிட தொழிலாளி கைது
9/8/2025 6:22:37 PM
பல்லாவரம்: பொழிச்சலூர் பகுதியில் பைக்கில் சென்ற அரசு பஸ் டிரைவரை அடித்து உதைத்த கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.சென்னை பொழிச்சலூர், விநாயகா நகர், கலைஞர் தெருவை சேர்ந்தவர் வைகுண்டராஜன் (57). இவர் தாம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக உள்ளார். நேற்று அரசு ஊழியர்களை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றார். பின்னர் தனது பணியை முடித்துவிட்டு பைக்கில் வீட்டுக்கு வந்தார்.
பொழிச்சலூர் பிரதான சாலையில் உள்ள விநாயகர் கோயில் அருகே வரும்போது அங்கு நின்ற நபர் ஒருவர், வைகுண்டராஜன் பைக்கை மறித்து சரமாரியாக தாக்கினார்.சங்கர்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். டிரைவரை தாக்கிய பொழிச்சலூர், விநாயகநகர், காத்தவராயன் கோவில் தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி முருகனை கைது ெசய்தனர்.