இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

நீதிபதிகள் குறித்து சர்ச்சை கருத்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

8/14/2020 2:48:31 PM
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?... தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு சென்னை, இம்பால், ராஞ்சியில் என்ஐஏ கிளை ஏன்?

புதுடெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூஷண் கடந்த ஜூலை மாதம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்து 2 டுவிட்டரில் சில கருத்துக்களை பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து பிரசாந்த் பூஷணின் கருத்து நீதித் துறையையும், நீதிமன்றத்தையும் அவமதிப்பதாகக் கூறி உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. பிரசாந்த் பூஷணுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இவ்வழக்கில் பிரசாத் பூஷண் சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதாடினார். அப்போது, ‘நீதிபதி மீதான விமர்சனம், நீதிமன்றத்தின் மீதான விமர்சனமாக மாறிவிடாது.

மனுதாரர் தனது டுவிட்டின் பகுதிக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது கருத்துகள் நீதிமன்றத்தை அவமதிப்பதாகவோ அல்லது நீதிமன்றத்தின் கவுரவத்தை எந்த வகையிலும் குறைக்கவோ செய்யாது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்படும் வழக்கு விசாரணை குறித்தும் மனுதாரர் அதிருப்தி தெரிவித்துள்ளார்’ என்று பிரசாந்த் பூஷண் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘தலைமை நீதிபதி மற்றும் சில நீதிபதிகள் குறித்து பிரசாந்த் பூஷணின் டுவிட்டர் பதிவுகள் நீதிமன்றத்தையும் நீதிபதியையும் அவமதிப்பதாக உள்ளன. அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்படுவதால், பிரசாந்த் பூஷண் குற்றவாளி. 6 மாதம் வரை அவருக்கு சிறை தண்டனை வழங்க முடியும். தண்டனை விபரங்கள் 20ம் தேதி அறிவிக்கப்படும்’ என்று அதிரடி தீர்ப்பளித்தனர்.

மேலும் சில
  • சென்னை, இம்பால், ராஞ்சியில் என்ஐஏ கிளை ஏன்?



  • கொரோனா ஊரடங்கு நீடிக்கும் நிலையில் இன்று 5ம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு?... சினிமா தியேட்டர், மண்டபங்கள் திறக்க வாய்ப்பு



  • உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்த நிலையில் நிலம் கையகப்படுத்துதல் வழக்கில் முக்கிய திருப்பம்: புதிய கேள்விகளை எழுப்பி மீண்டும் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்



  • வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு



  • வேளாண் மசோதா நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ கூட்டணியில் இருந்து விலகியது சிரோன்மணி; 22 ஆண்டுகால உறவு முறிந்ததாக மாஜி அமைச்சர் அறிவிப்பு



  • உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்



  • போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை தீபிகா படுகோன் ஆஜர்: அடுத்தடுத்து நடிகைகள் சிக்குவதால் பரபரப்பு



  • பாஜக கூட்டணிக்கு வந்த மாஜி முதல்வருக்கு பரிசு மன்ஜிக்கு ‘இசட் பிளஸ்’ பஸ்வானுக்கு ‘இசட்’: பீகார் தேர்தலில் ஆளும் கூட்டணியில் சலசலப்பு



  • கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அக். 28, நவ. 3, நவ. 7ல் வாக்குப்பதிவு; நவ. 10ல் ரிசல்ட் 65 தொகுதி இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிப்பு



  • கலாச்சார ஆய்வுக் குழுவை கலைத்திடக் கோரி குடியரசு தலைவருக்கு 32 எம்பிக்கள் கடிதம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]