இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கேரள தங்கம் கடத்தல் வழக்கு; 3 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

8/12/2025 2:21:59 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் சொப்னா, சரித்குமார் உள்பட இதுவரை 14 பேரை சுங்க இலாகாவினர் கைது செய்துள்ளனர். இதில் முக்கிய நபர்களான முகமது அன்வர், ஷமீம், ஜிப்சல் ஆகியோர் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு நீதிபதி அசோக் ேமனோன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பு வக்கீல் வாதிடுகையில், ‘‘கைது செய்யப்பட்டுள்ள 3 பேரும் நிரபராதிகள். இவர்களுக்கு எதிராக ‘உபா’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இவர்களை ஜாமீனில் விடுவிக்க ேவண்டும்’’ என்றார். சுங்க இலாகா தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘முகமது அன்வர் தங்கம் உள்பட மிகப்பெரிய கள்ளக்கடத்தல் கும்பலை சேர்ந்தவர். தங்கம் கடத்த பலரிடம் இருந்தும் ஹவாலா பணத்தை திரட்டி உள்ளார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட செய்யது அலவியிடம் நடத்திய விசாரணையில், அன்வருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. முகமது அன்வரை ைகது செய்து நடத்திய விசாரணையில், அவரது கூட்டாளிகளான ஷமீம், ஜிப்சல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஷமீமும், ஜிப்சலும் வியாபார பங்குதாரர்கள். தங்கம் கடத்தலுக்கும், அதற்கான சதி திட்டத்திலும் தங்களுக்குள்ள பங்கு குறித்து இவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஹவாலா பணத்தை திரட்டி வெளிநாட்டுக்கு கொண்டு சென்று, அங்கிருந்து தங்கம் வாங்கி தூதரக பார்சல் வழியாக இந்தியாவுக்கு கடத்தி உள்ளனர். இது மிகப்பெரிய குற்றம் என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு பெருமளவில் தங்கம் கடத்துவதில் மேலும் பல கும்பல்கள் ஈடுபட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. எனவே கூடுதல் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக அட்டாஷே ராஷித் கமிஸ் அல்சலாமி பெயரில் துபாயில் இருந்து ஒரு பார்சல் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் சட்டத்துக்கு புறம்பான பொருட்கள் இருப்பதாகவும் எங்களுக்கு விபரம் கிடைத்தது. இந்திய வெளியுறவுத்துறை சட்டத்துக்கு புறம்பாக இந்த பார்சல் கொண்டு வரப்படுகிறது எனவும், அதில் சட்டப்படி இருக்க வேண்டிய கையெழுத்து எதுவும் இல்லை எனவும் எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அனைத்து சட்ட விதிமுறைகளையும் பின்பற்றி அந்த பார்சலை திறக்க நாங்கள் தீர்மானித்தோம். அப்போது ரூ.14 கோடியே 82 லட்சத்து 10 மதிப்புள்ள 30.244 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சரித்குமார், சொப்னா, சந்தீப் நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்’’ என்றார். இதையடுத்து சொப்னா உள்பட 3 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் 4 நாட்கள் காவல்

சொப்னா, சந்தீப் நாயர், சரித்குமார் ஆகியோரின் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது கூடுதல் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் மேலும் 5 நாட்கள் மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் 4 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

மேலும் சில
  • சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு



  • சவரனுக்கு ரூ128 அதிகரிப்பு: தங்கம் விலை 2வது நாளாக உயர்ந்தது



  • 11 பேர் வழிகாட்டு குழு அமைத்த பிறகே முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு; ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பிடிவாதம்: ஆதரவாளர்களுடன் 2வது நாளாக இன்றும் ஆலோசனை



  • தங்கம் விலை மீண்டும் கிடு கிடு: ஒரே நாளில் பவுனுக்கு ரூ608 அதிகரிப்பு



  • கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?... தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு



  • நாளையுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை: மருத்துவ நிபுணர்களுடன் பிற்பகலில் ஆலோசனை



  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



  • மக்களை வஞ்சிக்கும் பாஜ, அதிமுக அரசுகளின் கூடாரம் விரைவில் காலியாகும்: தேர்தல் மூலம் பாடம் புகட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி



  • மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]