இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: காங். இடைக்கால தலைவராக சோனியா தொடர்வார்: கட்சியின் செய்தி தொடர்பாளர் தகவல்

8/10/2025 2:54:42 PM
பிரபல தயாரிப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு : நடிகை பயல் கோஷ் டுவிட்டால் அதிரும் பாலிவுட் கொரோனா தடுப்பு குறித்து வரும் 23ம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: அதிக தொற்று பாதிப்புள்ள மாநில முதல்வர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தொடர்வார்  என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறினார்.  கடந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று, அப்போது கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனால், கடந்தாண்டு ஆக. 10ம் தேதி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். அவர் ஏற்கனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில், சோனியா காந்தியின் பதவிக்காலம் இன்றுடன் (ஆக. 10) முடிவடைவதையொட்டி, காங்கிரஸ் கட்சிக்கு புதியதாக தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா? அல்லது இடைக்கால தலைவரின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, காணொலி காட்சி மூலம் அளித்த பேட்டியில், ‘சோனியா காந்தியின் இடைக்கால தலைவர் பதவிக் காலம் இன்று நிறைவடைவது உண்மையே. இருந்தாலும் கட்சியின் தலைவர் பதவியிடம் காலியாக இருப்பதாக அர்த்தமல்ல. சோனியா காந்திதான் காங்கிரஸ் கட்சியின் தலைவர். புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்தப் பணிகள் விரைவில் முடிவடையும். அதுவரை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தொடர்வார்’ என்றார்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர் விடுத்துள்ள செய்தியில், ‘கடந்தாண்டு சோனியா காந்தி இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்டபோது நானும் வரவேற்றேன். ஆனால் அவர் நீண்டகாலம் சுமையை சுமக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமானது அல்ல. நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும்’ எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • பிரபல தயாரிப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு : நடிகை பயல் கோஷ் டுவிட்டால் அதிரும் பாலிவுட்



  • கொரோனா தடுப்பு குறித்து வரும் 23ம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: அதிக தொற்று பாதிப்புள்ள மாநில முதல்வர்கள் பங்கேற்பு



  • மாநிலங்களவையில் பல்வேறு கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் தாக்கல்: திமுக, காங். உள்ளிட்ட கட்சிகள் காரசார பேச்சு



  • மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு இல்லை; தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஒரேமாதிரி முடிவு



  • மத்திய அரசின் வேளாண் மசோதாவை எதிர்த்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயி தற்கொலை; பஞ்சாப்பில் சோகம்



  • பெங்களூர் விமான நிலையம் வழியாகவும் தங்கம் கடத்தல்: சொப்னா கும்பல் குறித்து அதிர்ச்சி தகவல்



  • ஒரே நாளில் 97,894 பேருக்கு தொற்று: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 51.18 லட்சமாக உயர்வு



  • ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை



  • பிரதமர் மோடிக்கு 70வது பிறந்தநாள்: மத்திய அமைச்சர்கள், தலைவர்கள் வாழ்த்து



  • அரசியல்வாதிகளுக்கு எதிரான 4,600 வழக்குகள் தேக்கம்: உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை ஏற்க தயார்: மத்திய அரசு தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]