இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் பாஸ்

8/10/2025 2:50:28 PM
வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அரசு அறிவித்தபடி தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் பத்தாம் வகுப்பில் படித்த மாணவர்களுக்கான தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி தொடங்க இருந்த நிலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, காலாண்டு தேர்வில் 30 சதவீதம், அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படை யில் 70 சதவீதம் கணக்கீடு செய்து, அதன் அடிப்படையாக கொண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு அறிவித்தது.

இதையடுத்து, தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான மதிப்பெண்கள் வழங்க அந்தந்த பள்ளிகளில் இருந்து காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் கடந்த மாதம் பெறப்பட்டது. இதை அடிப்படையாக கொண்டு மாணவர்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டது. ஆனால், காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாதவர்கள் தோல்வி என்று அறிவிக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியல்களில் ஆப்சென்ட் என்று பதிவு செய்யப்படும் என்று ஏற்கெனவே தேர்வுத்துறை அறிவித்து இருந்தது. இதையடுத்து இன்று காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை வெளியிட்டது.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 12690 பள்ளிகளில் மேனிலைப் பள்ளிகள் 7368, உயர்நிலைப் பள்ளிகள் 5322. இவற்றில் பத்தாம் வகுப்பு படித்த 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இவர்களில் மாணவியர் 4 லட்சத்து 68 ஆயிரத்து 70 பேர், மாணவர்கள் 4 லட்சத்து 71 ஆயிரத்து 759 பேர். மொத்த தேர்ச்சி 100 சதவீதம். இவர்கள் தவிர 6235 மாற்றுத் திறனாளிகளும் இந்த தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடம்
பத்தாம் வகுப்பு தேர்வு  முடிவுகளில் மாவட்ட வாரியான தேர்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டம்  முதலிடத்தையும் வேலூர் மாவட்டம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. சென்னை  மாவட்டம் 3ம் இடத்தை பிடித்துள்ளது. மொத்த தேர்ச்சி பெற்றோரில் மாணவர்களை விட மாணவியரே அதிக அளவில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம்  மாவட்டத்தில் மொத்தம் தேர்வு எழுதியோர் 52741 பேர். அவர்களில் 26701  மாணவர்கள், 26040 மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து, காஞ்சிபுரம்  மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவதாக வேலூர் மாவட்டம் வந்துள்ளது.  

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் தேர்வு எழுதியோர் 50916 பேர். இவர்களில்  மாணவர்கள் 25691 பேர். மாணவியர் 25225 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை  மாவட்டம் 3வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் மொத்தம் தேர்வு  எழுதியோர் 49235 பேர். அவர்களில் மாணவர்கள் 23938 பேர், மாணவியர் 25297  பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் சில
  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



  • மக்களை வஞ்சிக்கும் பாஜ, அதிமுக அரசுகளின் கூடாரம் விரைவில் காலியாகும்: தேர்தல் மூலம் பாடம் புகட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி



  • மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம்



  • மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கவே அக்டோபர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு; செங்கோட்டையன் பேட்டி



  • வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்; காஞ்சிபுரம் வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னேரிக்கரையில் பிரம்மாண்ட வரவேற்பு



  • அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் வேட்பாளர் பிரச்னை; இபிஎஸ்- ஓபிஎஸ் நாளை பலப்பரீட்சை: 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்பு ஆதரவாளர்கள் திரள்வதால் போலீஸ் குவிப்பு



  • 72 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் பாடகர் எஸ்பிபி உடல் அடக்கம்: தாமரைப்பாக்கத்தில் திரையுலகினர், ரசிகர்கள் இறுதி அஞ்சலி



  • வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை மற்றும் புறநகரில் விவசாயிகள்: சாலை மறியல் - தீவிர போராட்டம்



  • மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை: செட் ஆகாது என்றால் கட்டாயம் அல்ல: தமிழக வேளாண் துறை அமைச்சர், செயலாளர் மீண்டும் உறுதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]