இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

2ம் ஆண்டு நினைவு தினம்; கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை: கொரோனா முன்களப்பணியாளருக்கு நல உதவி வழங்கினார்

8/7/2025 2:30:00 PM
குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை சவரனுக்கு ரூ128 அதிகரிப்பு: தங்கம் விலை 2வது நாளாக உயர்ந்தது

சென்னை: கலைஞரின் 2வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில்  மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் கொரோனா முன்களப்பணியாளருக்கு நல உதவிகளை வழங்கினார். கலைஞரின் இரண்டாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் திமுக பொருளாளர் துரைமுருகன்,  முதன்மை செயலாளர் கே.என்.நேரு, திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கலாநிதி வீராசாமி எம்பி,  மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம்,  சிற்றரசு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து கலைஞர் ஆட்சி காலத்தில் செய்த சாதனைகள் குறித்த பதாகைகளை கையிலேந்தி கோஷமிட்டனர். அதன் பிறகு மு.க.ஸ்டாலின் “கொரோனா போராளிகள்”  என்று அழைக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள்,  மக்கள் நல்வாழ்வுத் துறை ஊழியர்கள்,  தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும்  நலத்திட்ட உதவிகளை வழங்கினர். முன்னதாக அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதே போல்  கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முன்னதாக கோபாலபுரத்தில் உள்ள வீட்டிலும் கலைஞரின் படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன்,  பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், சிற்றரசு ஆகியோர் ஏற்பாட்டில் பல்வேறு  நல உதவிகள் வழங்கப்பட்டது.

இதே போல் தமிழகம் முழுவதும் கலைஞர் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு நல உதவிகளை திமுகவினர் வழங்கினர். கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளையில் அவரின் சிலையை காணொலி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தநிகழ்ச்சியில் அன்பில் மாவட்டச் செயலாளர் மகேஷ் பொய்யாமொழி, விவசாயிகள் அணி தலைவர் ஏ.கே.எஸ்.விஜயன், டிஆர்பி ராஜா, முன்னாள் அமைச்சர் மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னாள் முதல்வர் கலைஞர் 2வது நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மலர்வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் டிஆர்ஆர்.செங்குட்டுவன், கழக குமார், ஜீவன், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

மேலும் சில
  • சவரனுக்கு ரூ128 அதிகரிப்பு: தங்கம் விலை 2வது நாளாக உயர்ந்தது



  • 11 பேர் வழிகாட்டு குழு அமைத்த பிறகே முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு; ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பிடிவாதம்: ஆதரவாளர்களுடன் 2வது நாளாக இன்றும் ஆலோசனை



  • தங்கம் விலை மீண்டும் கிடு கிடு: ஒரே நாளில் பவுனுக்கு ரூ608 அதிகரிப்பு



  • கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?... தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு



  • நாளையுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை: மருத்துவ நிபுணர்களுடன் பிற்பகலில் ஆலோசனை



  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



  • மக்களை வஞ்சிக்கும் பாஜ, அதிமுக அரசுகளின் கூடாரம் விரைவில் காலியாகும்: தேர்தல் மூலம் பாடம் புகட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி



  • மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம்



  • மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கவே அக்டோபர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு; செங்கோட்டையன் பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]