இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

8/5/2025 2:37:13 PM
வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

சென்னை: திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட அகில இந்தியப் பணிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி) நடத்திய குடிமைப் பணிகள் (சிவில் சர்வீசஸ்) தேர்வில் வெற்றி பெற்றுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த  பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் தமிழகத்தில் முதலிடத்தையும், தேசிய அளவில் 7வது இடத்தையும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும் தேசிய அளவில் 47வது இடத்தையும் பெற்று ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றியடைந்து நிர்வாகத்தில் பொதுப்பணியாற்ற வந்திருப்பது உள்ளபடியே பெருமகிழ்ச்சிக்குரியது.

குறிப்பாக, மதுரை பூர்ணசுந்தரி, சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த  பாலநாகேந்திரன் ஆகிய மாற்றுத் திறனாளிகள் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் செய்தி, எனது இதயத்தை நிரப்பி ஈடிலா மகிழ்ச்சியைத் தருகிறது. வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும்  கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பினை நாட்டின் முன்னேற்றத்திற்கும் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும் குறிப்பாக, பிறந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்திப் பணியாற்றிட எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முறை வெற்றி வாய்ப்பு கிட்டாதவர்கள், அதற்காகச் சிறிதும் சோர்ந்து விடாமல் இந்தப் பொன்னான வாய்ப்பு நமக்காகக் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையுடனும், உறுதியுடனும், தொடர்ந்து முயற்சிகளை மேலும் வலுப்படுத்திட வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



  • மக்களை வஞ்சிக்கும் பாஜ, அதிமுக அரசுகளின் கூடாரம் விரைவில் காலியாகும்: தேர்தல் மூலம் பாடம் புகட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி



  • மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம்



  • மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கவே அக்டோபர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு; செங்கோட்டையன் பேட்டி



  • வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்; காஞ்சிபுரம் வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னேரிக்கரையில் பிரம்மாண்ட வரவேற்பு



  • அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் வேட்பாளர் பிரச்னை; இபிஎஸ்- ஓபிஎஸ் நாளை பலப்பரீட்சை: 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்பு ஆதரவாளர்கள் திரள்வதால் போலீஸ் குவிப்பு



  • 72 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் பாடகர் எஸ்பிபி உடல் அடக்கம்: தாமரைப்பாக்கத்தில் திரையுலகினர், ரசிகர்கள் இறுதி அஞ்சலி



  • வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை மற்றும் புறநகரில் விவசாயிகள்: சாலை மறியல் - தீவிர போராட்டம்



  • மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை: செட் ஆகாது என்றால் கட்டாயம் அல்ல: தமிழக வேளாண் துறை அமைச்சர், செயலாளர் மீண்டும் உறுதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]