இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ500 அபராதம்: சுகாதார துறை அதிரடி

8/5/2025 2:35:37 PM
வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

சென்னை: பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கும் சட்டம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம் கடுமையாக கடைப்பிடிக்கப்படும் என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது. மருந்துகள் இல்லாத நிலையில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

கொரோனா பாதிக்கப்பட்டவரிடம் பேசுவதன் மூலம், கண்ட இடங்களில் எச்சில் துப்புதல் மூலம் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்க சுகாதார துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி தமிழ்நாடு புகைபிடித்தல் மற்றும் எச்சில் உமிழ்தல் சட்டத்தின் கீழ் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு முதல் முறை ரூ.100 அபராதம் விதிக்கப்படும். 2வது முறை ரூ.200 வரையும், 3வது முறை ரூ.500 வரையும் அபராதம் விதிக்க முடியும். இந்த சட்டத்தின்படி தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக அபராதம் விதிக்க முடியும்.

மேலும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படியும் அபராதம் விதிக்கலாம். அதைப்போன்று உள்ளாட்சி அமைப்பு இது தொடர்பான துணை விதிகளை உருவாக்கியுள்ளன. இந்த துணை விதிகளை பின்பற்றியும் அபராதம் விதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இந்த சட்டம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. இனிமேல் கண்ட இடங்களில் எச்சில் துப்பினால் அபாரதம் கட்ட வேண்டியிருக்கும். இந்த சட்டத்தை கடுமையாக கடைப்பிடிக்க சுகாதார துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சில
  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



  • மக்களை வஞ்சிக்கும் பாஜ, அதிமுக அரசுகளின் கூடாரம் விரைவில் காலியாகும்: தேர்தல் மூலம் பாடம் புகட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி



  • மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம்



  • மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கவே அக்டோபர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு; செங்கோட்டையன் பேட்டி



  • வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்; காஞ்சிபுரம் வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னேரிக்கரையில் பிரம்மாண்ட வரவேற்பு



  • அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் வேட்பாளர் பிரச்னை; இபிஎஸ்- ஓபிஎஸ் நாளை பலப்பரீட்சை: 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்பு ஆதரவாளர்கள் திரள்வதால் போலீஸ் குவிப்பு



  • 72 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் பாடகர் எஸ்பிபி உடல் அடக்கம்: தாமரைப்பாக்கத்தில் திரையுலகினர், ரசிகர்கள் இறுதி அஞ்சலி



  • வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை மற்றும் புறநகரில் விவசாயிகள்: சாலை மறியல் - தீவிர போராட்டம்



  • மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை: செட் ஆகாது என்றால் கட்டாயம் அல்ல: தமிழக வேளாண் துறை அமைச்சர், செயலாளர் மீண்டும் உறுதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]