இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நாளை, நாளை மறுதினம் மதுரை, திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி நேரில் ஆய்வு: இன்று மதியம் புறப்பட்டு சென்றார்

8/5/2025 2:33:10 PM
வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

சென்னை: தென்மாவட்டங்களில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு நாளையும், நாளை மறுதினமும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்கிறார். இதற்காக இன்று மதியம் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளையும், நாளை மறுதினமும் திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்கிறார். இதையொட்டி, முதல்வர் இன்று மதியம் 2 மணிக்கு சென்னையில் இருந்து கார் மூலம் சேலம் புறப்பட்டு சென்றார். சேலத்தில் இருந்து நாளை காலை 7.30 மணிக்கு புறப்பட்டு 9.30 மணிக்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் சென்றடைகிறார்.

அங்கு கலெக்டர், வருவாய் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் நாளை மதியம் 1.30 மணிக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு மதுரை கலெக்டர் அலுவலகம் செல்கிறார். அங்கு அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துகிறார். தொழில் முனைவோர்கள் கூட்டத்திலும் முதல்வர் கலந்து கொள்கிறார். இரவு மதுரையில் தங்குகிறார்.
நாளை மறுதினம் (வெள்ளி) காலை 7.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 9.30 மணிக்கு திருநெல்வேலி மாவட்டம் செல்கிறார்.

அங்கு திருநெல்வேலி, தென்காசி மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மீண்டும் சேலம் புறப்பட்டு செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சனி மற்றும் ஞாயிறு சேலத்திலேயே தங்கி இருக்கிறார். பின்னர் 10ம் தேதி (திங்கள்) காலை புறப்பட்டு சென்னை வருகிறார்.

மேலும் சில
  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



  • மக்களை வஞ்சிக்கும் பாஜ, அதிமுக அரசுகளின் கூடாரம் விரைவில் காலியாகும்: தேர்தல் மூலம் பாடம் புகட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி



  • மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம்



  • மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கவே அக்டோபர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு; செங்கோட்டையன் பேட்டி



  • வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்; காஞ்சிபுரம் வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னேரிக்கரையில் பிரம்மாண்ட வரவேற்பு



  • அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் வேட்பாளர் பிரச்னை; இபிஎஸ்- ஓபிஎஸ் நாளை பலப்பரீட்சை: 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்பு ஆதரவாளர்கள் திரள்வதால் போலீஸ் குவிப்பு



  • 72 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் பாடகர் எஸ்பிபி உடல் அடக்கம்: தாமரைப்பாக்கத்தில் திரையுலகினர், ரசிகர்கள் இறுதி அஞ்சலி



  • வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை மற்றும் புறநகரில் விவசாயிகள்: சாலை மறியல் - தீவிர போராட்டம்



  • மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை: செட் ஆகாது என்றால் கட்டாயம் அல்ல: தமிழக வேளாண் துறை அமைச்சர், செயலாளர் மீண்டும் உறுதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]