இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு

8/4/2025 2:41:49 PM
வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதான ரமீஸ், தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ தீர்மானித்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வழியாக தங்கம் கடத்திய வழக்கில், சொப்னா, சந்தீப் நாயர் ஆகியோரை 5 நாள் காவலில் எடுத்து சுங்க இலாகா விசாரித்தது. இதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் சொப்னாவுடன் கேரளாவை சேர்ந்த ஒரு முக்கிய அரசியல் பிரமுகருக்கு மிக நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

கேரள அரசில் மிகவும் செல்வாக்கான இவர், ெசாப்னாவின் தங்கம் கடத்தலுக்கு பலமுறை உதவி செய்து இருக்கிறார். சொப்னா கைதாவதற்கு ஒருசில நாளுக்கு முன்புவரை அரசியல் பிரமுகர் பலமுறை அவரை ரகசியமாக சந்தித்து பேசி உள்ளார். இந்த விபரங்களை சுங்க இலாகாவினரின் விசாரணையின் போது சொப்னா கூறி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நேற்று கொச்சியில் சுங்க இலாகா உயர் அதிகாரிகள் பங்கேற்ற அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சொப்னாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த, அரசியல் பிரமுகரிடம் விரைவில் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி கடத்தல் தங்க கடத்தலில் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்த காரணத்தில்தான் என்ஐஏ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

கடத்திய தங்கத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணம் தீவிரவாத செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களையும் என்ஐஏ கண்டுபிடித்துள்ளது. கைதாகி உள்ள ரமீஸ் தீவிரவாத குழுக்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் துபாயில் இருந்து ரமீஸ் கொச்சி வந்தார். அப்போது அவரது கைப்பையில் ஏராளமான துப்பாக்கிகளுக்கான பாகங்கள் இருந்தன. இதுகுறித்து விசாரித்தபோது துப்பாக்கி சுடும் பயற்சி நிறுவனத்துக்காக கொண்டு வரப்பட்ட ஏர்-கன்கள் என்று தெரிவித்தார். அதில் 6 துப்பாக்கிகள் உள்ளன என்று தெரிவித்தபோதும், மொத்தம் 13 துப்பாக்கிகளுக்கான பாகங்கள் இருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளின் தடயவியல் பரிசோதனை நேற்று சுங்க இலாகாவுக்கு கிடைத்தது. இதில் அந்த 13 துப்பாக்கிகளும் ஏர்-கன் அல்ல எனவும், அவை ேதாட்டாக்களை வைத்து சுடும் நிஜ துப்பாக்கிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ரமீஸ் தீவிரவாதிகளுக்காக துப்பாக்கிகளை கடத்தினாரா? இதற்குமுன்பும் இதுபோல துப்பாக்கிகளை கடத்தி வந்தாரா? என்பது குறித்தும் ரமீஸை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ, சுங்க இலாகா அதிகாரிகள் தீர்மானித்து உள்ளனர்.

என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில்  கேஸ் டயரி தாக்கல்
கேரள தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பான கேஸ் டயரி இன்று கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா, சந்தீப் நாயர் ஆகியோர் ஜாமீன் கோரி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அவர்கள் மீது ‘உபா’ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரங்களையும், கேஸ் டயரியையும் தாக்கல் செய்ய வேண்டும் என என்ஐஏவுக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் உத்தரவிட்டார். இந்த நிலையில் தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பான கேஸ் டயரியை சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ இன்று தாக்கல் செய்தது.

இதில் கடத்தல் கும்பலுக்கு தீவிரவாதிகளுடன் உள்ள தொடர்பு குறித்தும், கடத்தி விற்கப்பட்ட தங்கம் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது குறித்தும் உரிய ஆவணங்களுடன் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் சொப்னா மற்றும் சந்தீப் நாயர் இருவரின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் இன்று என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் வருகிறது. இதில் என்ஐஏ தாக்கல் செய்துள்ள கேஸ் டயரியை முழுமையாக பரிசீலித்த பின்னரே சொப்னா மற்றும் சந்தீப் நாயரின் ஜாமீன் மனு குறித்து நீதிபதி முடிவெடுப்பார்.

32 பக்க வாக்குமூலம்
சொப்னா, சந்தீப் நாயரை என்ஐஏ 14 நாட்களும், சுங்க இலாகா 5 நாட்களும் காவலில் எடுத்து விசாரித்தன. நேற்று சுங்க இலாகாவினர் 32 பக்கங்கள் கொண்ட சொப்னாவின் வாக்குமூலத்தை எர்ணாகுளம் பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதில் முக்கிய பிரமுகர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் பிற்காலத்தில் வாக்குமூலத்தை மாற்ற சொப்னாவுக்கு அவர்கள் அழுத்தம் கொடுக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டதால், சுங்க இலாகா இதை நீதிமன்றத்தில் உடனடியாக தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் சில
  • வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு



  • வேளாண் மசோதா நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ கூட்டணியில் இருந்து விலகியது சிரோன்மணி; 22 ஆண்டுகால உறவு முறிந்ததாக மாஜி அமைச்சர் அறிவிப்பு



  • உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்



  • போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை தீபிகா படுகோன் ஆஜர்: அடுத்தடுத்து நடிகைகள் சிக்குவதால் பரபரப்பு



  • பாஜக கூட்டணிக்கு வந்த மாஜி முதல்வருக்கு பரிசு மன்ஜிக்கு ‘இசட் பிளஸ்’ பஸ்வானுக்கு ‘இசட்’: பீகார் தேர்தலில் ஆளும் கூட்டணியில் சலசலப்பு



  • கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அக். 28, நவ. 3, நவ. 7ல் வாக்குப்பதிவு; நவ. 10ல் ரிசல்ட் 65 தொகுதி இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிப்பு



  • கலாச்சார ஆய்வுக் குழுவை கலைத்திடக் கோரி குடியரசு தலைவருக்கு 32 எம்பிக்கள் கடிதம்



  • திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே ரூ200 கோடி மதிப்பில் ஓய்வறை: இருமாநில முதல்வர்கள் அடிக்கல் நாட்டினர்



  • ‘சிறந்த உழைப்பாளரை இழந்து விட்டோம்’மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடிக்கு மோடி இரங்கல்



  • பீகார் போலீஸ் டிஜிபி விருப்ப ஓய்வு: அரசியலில் குதித்து தேர்தலில் போட்டியிட திட்டம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]