இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தமிழகம் முழுவதும் ஆகஸ்டு மாத முதலாவது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; விதிகளை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு

8/2/2025 3:02:56 PM
நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு; விவசாயிகளின் குரல்களை அடக்கும் ஒன்றிய அரசு: டிராக்டர் ஓட்டிக்கொண்டு வந்த ராகுல் ஆவேசம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 968 எஸ்ஐகளுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழகம் முழுவதும் ஆகஸ்டு மாதத்திற்கான முதலாவது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்டது. விதிகளை மீறி வீட்டை விட்டு வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இததையடுத்து தமிழகம் மற்றும் சென்னையின் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை  6 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும், ஊரடங்கை முறையாக கடைபிடிக்காமல் பொதுமக்கள் அலட்சியம் காட்டியதன் விளைவாகவும், அரசின் குளறுபடியான நடவடிக்கைகளாலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த காலங்களில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்ைக அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 2,51,738 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,90,966 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4,034 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 1,00,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 86,301 பேர் வீடு திரும்பியுள்ளனர். 2140 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 30ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் தொற்று அதிகமானதையடுத்து ஆகஸ்டு 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவித்தார். மேலும், ஜூலை மாதத்தில் கடைபிடிக்கப்பட்டது போலவே, ஆகஸ்டு மாதத்திலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். இதன்படி இன்று மற்றும் 9, 16, 23, 30ம் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

ஏற்கனவே ஜூலை மாதத்தில் 4 நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 5வது ஞாயிற்றுக்கிழமையாக, ஆகஸ்டு மாதத்திற்கான முதலாவது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஊரடங்கு நேரத்தில் தளர்வுகளுடன் அனுமதிக்கப்பட்ட காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் இயங்க அனுமதி இல்லாததால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. பால், மருந்து கடைகள், பத்திரிகை விற்பனையகங்கள் மட்டும் வழக்கம் போல் இயங்கின. மேலும் அரசு அனுமதித்த பால், மருத்துவ பணிகள் சார்ந்த மற்றும் பத்திரிகை வாகனங்கள் மட்டும் சாலைகளில் ஓடின. அந்த வாகனங்களையும் போலீசார் நிறுத்தி சோதனை செய்த பிறகு தான் அனுமதித்தனர். இதனால் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், சேலம், நெல்லை உள்பட தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

மருத்துவ தேவைக்கு தவிர வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்று போலீசார் எச்சரித்து இருந்தனர். அதை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் முக்கிய சாலைகள் அனைத்திலும் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னையின் முக்கிய சாலைகளான பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, காமராஜர் சாலை, அண்ணாசாலை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற முக்கியமான சாலைகளில் 193 சோதனை சாவடி அமைத்து அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, நெல்லை, திருவண்ணாமலை, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் போன்ற அனைத்து மாவட்டங்களில் இந்த முழு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டது.

மேலும் சில
  • புதிதாக தேர்வு செய்யப்பட்ட 968 எஸ்ஐகளுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்



  • 10,906 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு உடல் தகுதி தேர்வு இன்று தொடங்கியது



  • உட்கட்சி பூசல், பதவி போட்டி, சசிகலா விவகாரம்; மோடியுடன் ஓபிஎஸ், இபிஎஸ் சந்திப்பு: அமித்ஷா, நட்டாவையும் சந்தித்து பேச திட்டம்



  • எடப்பாடியுடன் மோதல் எதிரொலி; மோடியுடன் ஓபிஎஸ் நாளை சந்திப்பு



  • மாமல்லபுரம் அருகே சாலை விபத்து: நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்; பெண் இன்ஜினியர் பரிதாப பலி



  • ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணம் பெற கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு



  • தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ல் கலைஞர் திருவுருவ படத்திறப்பு விழா: ஜனாதிபதி திறந்து வைக்கிறார்; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு



  • அதிமுக ஆட்சியில் முறைகேடு புகார் எதிரொலி; சென்னை மாநகராட்சியில் 660 ஒப்பந்தங்கள் ரத்து: ரூ43 கோடி இழப்புகள் தடுப்பு



  • அவதூறு பேச்சு வழக்கில் தேடப்பட்ட பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையா கைது



  • கொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பொது நூலகங்கள் இன்று முதல் இயங்க அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]