இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா

7/31/2020 2:43:05 PM
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?... தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு சென்னை, இம்பால், ராஞ்சியில் என்ஐஏ கிளை ஏன்?

திருவனந்தபுரம்: ேகரள தங்கம் கடத்தல் வழக்கில் ரமீஸை என்ஐஏ காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. விசாரணையில் அவர் என்ஐஏயிடம் கூறியதாவது: ெசாப்னாவும், சந்தீப் நாயரும் அடிக்கடி துபாய் வருவதுண்டு. கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் 6 முறை துபாய் வந்துள்ளனர். அப்போது என்னையும், பைசல் பரீதையும் சந்தித்து பேசினர். தங்கம் கடத்தல் குறித்து நாங்கள் விவாதித்தோம். தூதரக பார்சலில் தங்கம் கடத்த அனைத்து வசதிகளையும் தான் செய்து தருவதாக சொப்னா என்னிடம் உறுதியளித்தார். அவர் கொடுத்த தைரியத்தால்தான் தூதரக பார்சலில் தங்கத்தை அனுப்ப தீர்மானித்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கடந்த சில ஆண்டுகளில் அவரது கணக்குக்கு எவ்வளவு பணம் வந்துள்ளது, யார்யாருடன் பொருளாதார ரீதியில் தொடர்பு வைத்திருந்தார் என்ற விபரங்களை சுங்க இலாகா மற்றும் என்ஐஏ சேகரித்து வருகின்றன. இது தொடர்பாக நேற்று சுங்க இலாகா திருவனந்தபுரத்தில் உள்ள அவரது ஆடிட்டரிடம் விசாரணை நடத்தியது. பல மணிநேரம் நடந்த இந்த விசாரணையில் சிவசங்கர் கடந்த சில ஆண்டுகளில் மேற்கொண்ட பணி பரிவர்த்தனை குறித்த முழு விபரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. சொப்னாவிடம் என்ஐஏ விசாரித்தபோது தங்க கடத்தல் குறித்து திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக அட்டாஷே என அழைக்கப்படும் ராஷித் காமிஸ் அல்சலாமியை தனக்கு நன்றாக தெரியும் என கூறினார். ஒவ்வொரு முறையும் தங்கம் கடத்தும்போது, டாலர்களில் அவருக்கு பணம் கொடுத்ததாகவும் சொப்னா கூறினார். ஆனால் எவ்வளவு டாலர் என கேட்டபோது, முதலில் 1,000 டாலர் என கூறியவர், பின்னர் ஒவ்வொரு முறையும் 1,500 டாலர் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதை திருவனந்தபுரத்தில் உள்ள ஏஜென்டிடம் இந்திய ரூபாயை டாலராக மாற்றி அட்டாஷேவுக்கு கொடுத்ததாகவும் ெசாப்னா கூறினார். இதையடுத்து நேற்று சுங்க இலாகாவினர் அந்த ஏஜென்டிடம் விசாரணை நடத்தினர். அதில் முக்கிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தங்கம் கடத்தலில் அட்டாஷே ராஷித் காமிஸ் அல்சலாமிக்கும் தொடர்பு இருப்பதை சுங்க இலாகா உறுதி செய்துள்ளது. இதையடுத்து அட்டாஷேவிடம் விசாரணை நடத்த மத்திய அரசின் அனுமதியை கோரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • சென்னை, இம்பால், ராஞ்சியில் என்ஐஏ கிளை ஏன்?



  • கொரோனா ஊரடங்கு நீடிக்கும் நிலையில் இன்று 5ம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு?... சினிமா தியேட்டர், மண்டபங்கள் திறக்க வாய்ப்பு



  • உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்த நிலையில் நிலம் கையகப்படுத்துதல் வழக்கில் முக்கிய திருப்பம்: புதிய கேள்விகளை எழுப்பி மீண்டும் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்



  • வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு



  • வேளாண் மசோதா நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ கூட்டணியில் இருந்து விலகியது சிரோன்மணி; 22 ஆண்டுகால உறவு முறிந்ததாக மாஜி அமைச்சர் அறிவிப்பு



  • உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்



  • போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை தீபிகா படுகோன் ஆஜர்: அடுத்தடுத்து நடிகைகள் சிக்குவதால் பரபரப்பு



  • பாஜக கூட்டணிக்கு வந்த மாஜி முதல்வருக்கு பரிசு மன்ஜிக்கு ‘இசட் பிளஸ்’ பஸ்வானுக்கு ‘இசட்’: பீகார் தேர்தலில் ஆளும் கூட்டணியில் சலசலப்பு



  • கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அக். 28, நவ. 3, நவ. 7ல் வாக்குப்பதிவு; நவ. 10ல் ரிசல்ட் 65 தொகுதி இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிப்பு



  • கலாச்சார ஆய்வுக் குழுவை கலைத்திடக் கோரி குடியரசு தலைவருக்கு 32 எம்பிக்கள் கடிதம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]