இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

இதுவரை இல்லாத வகையில் நாடு முழுவதும் ஒரே நாளில் 779 பேர் பலி: பாதிப்பு 16 லட்சத்தை தாண்டியது

7/31/2020 2:35:50 PM
உங்களுக்கு என்ன... ஜான்சி ராணியினு நெனப்பா? கங்கனாவை வறுத்தெடுத்த மகளிர் ஆணைய தலைவி வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 55,079 பேருக்கு கொரோனா  தொற்று பாதித்த நிலையில், 779 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 16 லட்சத்தை தாண்டியுள்ளது. தளர்த்தப்பட்ட ஊரடங்கு அமலில் இருந்தும் கூட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 16,38,871 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 55,079  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்சமாக ஒரே நாளில் 779 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,747 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது. இதுவரை 10,57,806 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,45,318 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி உலகில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 5,999 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஒரு நாளில் மட்டும் 2,53,793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 16,812,755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 6,62,095 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 1,191 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 59,629 பேர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிகபட்சமாக பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 24,83,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகபட்சமாக கொரோனா தொற்றால் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • உங்களுக்கு என்ன... ஜான்சி ராணியினு நெனப்பா? கங்கனாவை வறுத்தெடுத்த மகளிர் ஆணைய தலைவி



  • வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு



  • டெல்லி எல்லைகளில் 7ம் நாளாக தொடர் போராட்டம்; வேளாண் சட்ட ஆட்சேபனைகள் இன்று மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு...விவசாய சங்கங்களுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை



  • ஜெகன் - சந்திரபாபு இடையே கடும் வாக்குவாதம்: 15 தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: ஆந்திர சட்டப்பேரவையில் பரபரப்பு



  • நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஜன. 27ம் தேதிக்குள் ‘சிசிடிவி’ கேமரா பொருத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • எதிர்கட்சிகளை அடக்க நினைக்கும் சிபிஐ, அமலாக்கத்துறையை எல்லைக்கு அனுப்புங்கள்..! மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம்



  • தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில பேரவை தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர் வாக்களிக்க ஏற்பாடு: சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை



  • ‘லவ் - ஜிகாத்’ எதிர்ப்பு சட்டத்தை போன்று மதம், வருமானம், தொழிலை தெரிவித்தால்தான் கல்யாணம்?... அசாமில் வருகிறது புது சட்டம்



  • டெல்லியில் 6ம் நாளாக போராட்டம்; விவசாயிகளுடன் மாலையில் பேச்சுவார்த்தை: 32 குழுக்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு



  • டெல்லியின் 5 நுழைவு வாயில்களிலும் போராட்டம்; ஜே.பி.நட்டா வீட்டில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை: பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட நிலையில் சிக்கல் நீடிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]