இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தற்கொலைக்கு தூண்டியதாக தந்தை புகார்; மறைந்த நடிகர் சுஷாந்த் காதலி ரியா மீது வழக்கு: பாட்னாவில் இருந்து மும்பை விரைந்தது போலீஸ்

7/29/2020 2:40:10 PM
74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார் நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் கொண்டாட்டம்; பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை..தேசிய கொடி ஏற்றிவைத்து பிரதமர் மோடி பேச்சு

பாட்னா: மறைந்த நடிகரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் காதலி ரியா உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், நடிகையிடம் விசாரணை நடத்த பாட்னாவில் இருந்து மும்பைக்கு போலீசார் விரைந்துள்ளனர். பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (34) கடந்த ஜூன் 14ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கான காரணத்தை கண்டறிவதற்காக போலீசார் அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் நடிகர்கள் உள்பட 38 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்து உள்ளனர்.

இந்த நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா  சக்கரபோர்த்தி மீது நடிகர் சுஷாந்த்  தந்தை பீகார் மாநிலம் பாட்னா போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ‘சுஷாந்த் சிங் ராஜ்புத்திடம்  நிதி முறைகேட்டில் ஈடுபட்டு அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு ரியா தூண்டியுள்ளார். சுஷாந்த் சிங்கின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரியா சக்கரபோர்த்தி பணம்  எடுத்துள்ளார். அவரை மன ரீதியாக டார்ச்சர் கொடுத்தார்’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார்  ரியா  சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர் 6 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். மும்பை போலீசார் ஏற்கனவே திரைப்பட தயாரிப்பாளர்கள் மகேஷ் பட், சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்களை விசாரித்துள்ளனர். காதலி ரியா சக்கரபோர்த்தியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

தற்போது பாட்னா போலீசார் ரியா மீது வழக்குபதிவு செய்துள்ளததால், 4 பேர் கொண்ட தனிப்படை மும்பையில் உள்ள நடிகை ரியா சக்கரபோர்த்தியிடம் விசாரணை செய்ய விரைந்துள்ளது. இதற்கிடையே, பிரபல போஜ்புரி நடிகரும், டெல்லி பாஜகவின் முன்னாள் தலைவரும், வடகிழக்கு டெல்லி பாஜக எம்பியுமான மனோஜ் திவாரி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘43 நாள்களுக்கு முன்பு உயிரிழந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேயிடம் கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு அவரது லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும். மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். சுஷாந்த் சிங் மரணத்துக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

மேலும் சில
  • நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் கொண்டாட்டம்; பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை..தேசிய கொடி ஏற்றிவைத்து பிரதமர் மோடி பேச்சு



  • கோடி கணக்கில் வெளிநாட்டு பணம் பதுக்கிய சொப்னா



  • நீதிபதிகள் குறித்து சர்ச்சை கருத்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு



  • மூணாறு நிலச்சரிவில் சிக்கிய அனைவரின் குடும்பத்துக்கும் வீடு; முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு



  • திருவல்லிக்கேணி, குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதி உட்பட 56 எம்எல்ஏ, 1 எம்பி தொகுதி இடைத்தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு?....4 மாநிலங்கள் தேர்தல் கமிஷனுக்கு கடிதம்



  • 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி கொடியேற்றுகிறார்; கொரோனா கட்டுப்பாடுகளுடன் உச்சகட்ட பாதுகாப்பு



  • மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டே சட்டம் நடைமுறைக்கு வருமா?: உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை



  • ‘என் தந்தை உயிருடன் உள்ளார்; வதந்தியை நம்பாதீர்’: பிரணாப் மகன் அபிஜித் தகவல்



  • டெல்லியில் பலத்த மழைக்கு மத்தியில் 74வது சுதந்திர தின ஒத்திகை: நாளை மறுநாள் விழாவுக்கு கூடுதல் பாதுகாப்பு



  • கொரோனா தடுப்பூசி நேரடியாக வாங்க மாநிலங்களுக்கு தடை: மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்க முடிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]