இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பத்திரப்பதிவு மேலும் எளிமையானது இணையதளம் மூலம் ஆவணங்களை பொதுமக்கள் உருவாக்கலாம்: அரசு தகவல்

7/28/2020 2:43:58 PM
74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார் நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் கொண்டாட்டம்; பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை..தேசிய கொடி ஏற்றிவைத்து பிரதமர் மோடி பேச்சு

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: பதிவுத்துறைக்கான ஸ்டார் 2.0 ஆன்லைன் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் நோக்கம், பாகுபாடற்ற சேவைகளை வெளிப்படையாக பொதுமக்களுக்கு வழங்குவதாகும். இந்த நோக்கத்திற்கு ஏற்ப மென்பொருளில் `பொதுமக்களே ஆன்லைன் வழி ஆவணங்களை உருவாக்கும் எளிய வழிமுறை’ உருவாக்கப்பட்டுள்ளது.https://tnreginet.gov.in என்ற இணையதளத்தில், பொதுமக்கள் என்ற வகைப்பாட்டில் புதிய உள்நுழைவை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். பிறகு பயனர் பெயர், கடவுச்சொல்லை உள்ளீடு செய்ய வேண்டும். அதை தொடர்ந்து, பதிவு செய்தல் - ஆவண பதிவு - ஆவணத்தினை உருவாக்குக என்பதை தெரிவு செய்ய வேண்டும். ஆவணத்தை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் உருவாக்கி கொள்ளலாம். ஆவணத்தை உருவாக்க கீழ்க்கண்ட விவரங்களை உட்புகுத்த வேண்டும்.

* தாங்கள் பதிவு செய்ய விரும்பும் ஆவணத்தின் தன்மையை அதாவது, அந்த ஆவணம் விற்பனை ஆவணமா, தான செட்டில்மெண்ட் ஆவணமா, குத்தகை ஆவணமா, அடமான ஆவணமா போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
* சொத்தை விற்பவர், அந்த சொத்தை வாங்கிய முன் ஆவண விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். பூர்வீக சொத்தாக இருப்பின் இதனை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை.
* எழுதி கொடுப்பவரின் பெயர், தந்தை பெயர், முகவரி போன்ற விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். முன் ஆவணத்தில் இருந்தும் விவரங்களை நகல் செய்யலாம்.
* எழுதி பெறுபவரின் பெயர், தந்தை பெயர், முகவரி போன்ற விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். முன் ஆவணத்தில் இருந்தும் விவரங்களை நகல் செய்யலாம்.
* பொது அதிகாரம் முகவர் மற்றும் சாட்சிகளின் விவரங்கள் எழுதி கொடுப்பவர் அல்லது எழுதிபெறுபவர் பொது அதிகாரம் அளித்திருப்பின் முகவரின் பெயர் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 2 சாட்சிகளின் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
* சொத்து விவரத்தின் கீழ் சர்வே எண், சொத்தின் பரப்பு, பட்டா எண் போன்றவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். கைமாற்று தொகை, அது செலுத்தப்பட்ட விவரத்தினையும் உள்ளீடு செய்ய வேண்டும்.
* சொத்தின் 4 எல்லைகளின் விவரம், சொத்து குறித்த மற்ற விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
* கட்டிடம் இருப்பின் அதன் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
* மேலே குறிப்பிட்ட விவரங்களை நிரப்பியவுடன் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் தானாகவே திரையில் தோன்றும். கட்டணங்களை இணையதளம் வழி செலுத்தலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • 74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார்



  • சென்னை கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் முதல்வர்



  • அதிமுகவில் கோஷ்டி மோதல் உச்சக்கட்டம்; 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ்தான் முதல்வர் வேட்பாளர்...தேனி மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் திடீர் பரபரப்பு



  • அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்?..அமைச்சர்கள் கடும் அதிருப்தி: உட்கட்சி சண்டையால் தொண்டர்கள் விரக்தி



  • தாயுள்ளம் கொண்ட தலைவர் கலைஞர் சட்டமாக்கிய சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தடையின்றி உடனே நடைமுறைப்படுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு; 3 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு



  • தங்கம் விலை 4வது நாளாக சரிவு; இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,832 குறைந்தது..கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தது காரணமா?



  • கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள அதிமுக அரசை மக்கள் நம்பியிருக்காமல் சுய பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுங்கள்; மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்



  • 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் பாஸ்



  • தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]