இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தமிழகத்தில் கொரோனா தீவிரம்: ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் எடப்பாடி நாளை கலெக்டர்களுடன் ஆலோசனை: பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு

7/28/2020 2:37:06 PM
74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார் நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் கொண்டாட்டம்; பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை..தேசிய கொடி ஏற்றிவைத்து பிரதமர் மோடி பேச்சு

சென்னை: சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு வரும் ஆகஸ்டு 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது ெதாடர்பாக நாளை நடைபெறும் மாவட்ட கலெக்டர்களுடனான கூட்டத்துக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், இந்த கட்டுப்பாட்டை முறையாக  கடைபிடிக்காமல் பொதுமக்கள் அலட்சியம் காட்டியதன் விளைவாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, கடந்த மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது வரை தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்  6 கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டும் கொரோனா பாதிப்பை  கட்டுப்படுத்த முடியவில்லை. மாறாக தினமும் அதிகரித்தே வருகிறது.  இந்த நிலையில் கடந்த மே மாதத்துக்கு பிறகு கடைகள் திறக்கலாம், தொழிற்சாலைகள் இயங்கலாம், ஆட்டோ, டாக்சி ஓடலாம், அரசு-தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

ஆனால், முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பு, அடிக்கடி சோப் போட்டு கை கழுவுதல் என்று பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தியும் அதை பின்பற்றாததால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், தினசரி புது, புது கட்டுப்பாடுகளை பிறப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா, வேண்டாமா என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. அப்போது அதிகம் பாதிப்புள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிப்பது தொடர்பாக  அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முடிவெடுக்கலாம் என்று முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்தை தாண்டி பாதிப்பு இருந்து வருகிறது. மதுரை, தேனி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி உட்பட பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அந்த மாவட்ட கலெக்டர்கள் முதல்வர் எடப்பாடியிடம் வலியுறுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், தற்போதைய சூழலில் மாநிலம் முழுவதும் பஸ், ரயில்  சேவை இருக்காது. அதே நேரத்தில் மாவட்டங்களுக்குள் பஸ் இயக்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம். காரணம், பஸ் இயக்க வாய்ப்பு இருப்பதால், ஊழியர்கள் தயார் நிலையில் இருக்குமாறு போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்  சென்னையை பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கடைகள் நேரத்தை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களில் கடைகள் நேரத்தில் எந்த வித மாற்றமும் இருக்காது.  மேலும்,  ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்றும் இப்போது அமலில் உள்ள ஊரடங்கு ஆகஸ்ட் மாதத்திலும் நீடிக்க வாய்ப்புள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை முழு  ஊரடங்கு அமலில் இருந்தது. அதே போன்று ஆகஸ்ட் மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்புள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்களை திறக்க வாய்ப்பு குறைவு தான்.  இது தொடர்பாக நாளை நடைபெறும் மாவட்ட கலெக்டர்கள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் எடப்பாடி அறிவிக்க வாய்ப்புள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில
  • 74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார்



  • சென்னை கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் முதல்வர்



  • அதிமுகவில் கோஷ்டி மோதல் உச்சக்கட்டம்; 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ்தான் முதல்வர் வேட்பாளர்...தேனி மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் திடீர் பரபரப்பு



  • அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்?..அமைச்சர்கள் கடும் அதிருப்தி: உட்கட்சி சண்டையால் தொண்டர்கள் விரக்தி



  • தாயுள்ளம் கொண்ட தலைவர் கலைஞர் சட்டமாக்கிய சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தடையின்றி உடனே நடைமுறைப்படுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு; 3 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு



  • தங்கம் விலை 4வது நாளாக சரிவு; இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,832 குறைந்தது..கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தது காரணமா?



  • கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள அதிமுக அரசை மக்கள் நம்பியிருக்காமல் சுய பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுங்கள்; மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்



  • 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் பாஸ்



  • தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]