இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

கொரோனா தடுப்பூசி 2021க்கு முன்பாக கிடைக்காது; உலக சுகாதார நிறுவன இயக்குனர் தகவல்

7/24/2020 2:43:20 PM
பிரபல தயாரிப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு : நடிகை பயல் கோஷ் டுவிட்டால் அதிரும் பாலிவுட் கொரோனா தடுப்பு குறித்து வரும் 23ம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: அதிக தொற்று பாதிப்புள்ள மாநில முதல்வர்கள் பங்கேற்பு

ஜெனீவா: கொரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளபோதிலும், அது மக்களுக்கு 2021ம் ஆண்டுக்கு முன்னதாக கிடைக்க வாய்ப்பில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்த இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகிப்பதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும் என்றும், இந்த தடுப்பூசி ரூ.1,000 விலையில் கிடைக்கும் என்றும் சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்தூள்ளது.

இவ்வாறாக பல நாடுகளும் தடுப்பூசி கிடைப்பது குறித்து பல்ேவறு கருத்துகளை கூறி வருகின்றன. ஆனால், உலக சுகாதார நிறுவனம் 2021ம் ஆண்டுக்கு முன்னதாக தடுப்பூசி கிடைக்காது என்று தெரிவிக்கிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால திட்ட அமைப்பின் இயக்குனர் மைக் ரையான் கூறியதாவது:  கொரோனா தடுப்பு மருந்து சோதனை, உலகளவில் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனை, 3ம் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை எவ்விடத்திலும் தோல்வி ஏற்படவில்லை. வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவே, தற்போது தடுப்பு மருந்து சோதனை நடைபெற்று வருகிறது. ஆனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பல நாடுகளில் மிக அதிகளவில் உள்ளது. தடுப்பு மருந்து பரிசோதனைகள் வெற்றி அளித்துள்ள நிலையில், 2021ம் ஆண்டின் முற்பகுதியில், மக்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது.

சர்வதேச அளவில், கொரோனா பாதிப்பு அதிகளவில் இருப்பதால், தடுப்பு மருந்தை அதிகளவிற்கு உற்பத்தி செய்ய சர்வதேச நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்தை, பணக்கார நாடுகள் ஏழை நாடுகள் என்ற பாகுபாடுஇன்றி அனைவருக்கும் எளிதில் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தங்களது தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்று நிரூபித்தால், அமெரிக்க அரசு 100 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்தை, 1.95 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்க முன்வந்துள்ளதாக தடுப்பு மருந்து தயாரித்துள்ள பிஸர் இங்க் மற்றும் ஜெர்மன் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராதநிலையில், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்து பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகே அந்தந்த நாடுகள், மாநிலங்கள் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொடிய விஷ ‘பார்சல்’: புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை



  • இது டிரெய்லர்தான்... மெயின் பிக்சர் இனிமேல்தான்... கொரோனாவின் 2வது அலை நிச்சயம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை



  • மத்திய கிழக்கு நாடுகளின் வரலாற்று சிறப்புமிக்க இஸ்ரேல்-யுஏஇ-பஹ்ரைன் அமைதி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து



  • ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி நாளை முதல் மக்களுக்கு விநியோகம்: உலகின் முதல் நாடாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு



  • மாஸ்கோவில் இந்திய-சீன அமைச்சர்கள் சந்திப்பு: எல்லை பதற்றத்தை குறைக்க 5 அம்ச திட்டம்: சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கை



  • சீன மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களின் விசா ரத்து: அமெரிக்கா அதிரடி



  • ஆக்ஸ்போர்டு பல்கலை தடுப்பூசி சோதனை திடீர் நிறுத்தம்: உலகளவிலான 3ம் கட்ட சோதனையில் பின்னடைவு



  • ரஷ்யா பயணத்தை முடித்துக் கொண்டு அமைச்சர் ராஜ்நாத் திடீர் ஈரான் பயணம்



  • உல்லாசத்துக்கு பஞ்சமில்லாத ரிசார்ட், நைட் கிளப், சானா பிரான்சில் நிர்வாண விரும்பிகளின் சொர்க்கபுரியில் கொரோனா தாண்டவம்



  • சட்டசபைக்கு கைக்குழந்தையுடன் வந்த உறுப்பினருக்கு பாராட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]