இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

டாஸ்மாக் கடைகள் கணினிமயம்: டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது நிர்வாகம்

7/14/2020 2:57:04 PM
74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார் நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் கொண்டாட்டம்; பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை..தேசிய கொடி ஏற்றிவைத்து பிரதமர் மோடி பேச்சு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் கணினிமயமாகின்றன. இதுகுறித்து, டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டது.  தமிழகம் முழுவதும் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் மது இருப்பு விவரம் மற்றும் குடோன்களில் மது இருப்பு ஆகியவை குறித்து சூப்பர்வைசர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டு அதை தினம் தோறும் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு அறிக்கையாக சமர்ப்பித்து வந்தனர். இந்த நடவடிக்கைகளில் பல்வேறு குளறுபடிகள் எழுந்தது. கடை மேற்பார்வையாளர்கள் சரியான இருப்பினை தாக்கல் செய்வதில்லை என்று கூறப்பட்டது. எனவே, கடைகளில் நேரடியாக இருப்பு விவரங்களை காண முழுவதும் கணினிமயப்படுத்தும் நடவடிக்கையை கடந்த ஆண்டு டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டது.

இந்த திட்டம் குறித்த அறிக்கையும்  தயார் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில், டாஸ்மாக் கடைகளில் இருப்பு விவரங்களை தலைமை அலுவலகத்தில் இருந்து தெரிந்து கொள்வதற்காக கணினிமயமாக்குவதற்கான டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மதுபானங்களின் இருப்பு, விற்பனை விவரங்களை அறிக்கையாக தயாரித்து கணினிமயமாக்கவும், அனைத்து கடைகளையும், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தையும் தொழில்நுட்பம் மூலம் இணைக்கவும் இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த திட்டம் நடைமுறைப்படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.

குறிப்பாக, கடைகளில் மதுபான இருப்பு, காலாவதியான மதுபானங்கள் எவ்வளவு, எவ்வளவு விற்பனை நடந்துள்ளது என்பதில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. குடோன்களில் இருந்து, மாவட்ட மேலாளர்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இருந்து நாம் இதை கண்காணிக்க முடியும். ஒவ்வொரு மதுபான பாட்டிலையும் விற்பனை செய்வதற்கு முன்பாக அதை பார் கோடு ஸ்கேனர் மூலமாக ஸ்கேன் செய்த பிறகே இனி விற்பனை செய்ய முடியும். இதன்மூலம், கட்டாயமாக பில்லிங் செய்ய வேண்டும் என்ற நிலை கொண்டு வரப்படுகிறது. இதனால், அனைத்து கடைகளிலும் நாம் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர முடியும்.

ஒவ்வொரு கடைக்கும் 2 பார் கோடு ஸ்கேனர் கருவி கொடுக்கப்படும். இனிமேல் விற்பனை, மதுபான இருப்பு குறித்த விவரங்களை கடை மேற்பார்வையாளர்கள் நேரடியாக கொண்டுவந்து கொடுக்க தேவையில்லை. அனைத்தும் தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டுவிடும். டாஸ்மாக் நிர்வாகத்திற்குள் மட்டுமே கணினிமயமாக்கப்படும். ஆன்லைனில் மது ஆர்டர் செய்து வாங்க இந்த நடவடிக்கை கிடையாது.

இதேபோல், கணினி மயம் என்றால் கடைகளில் கணினி இருக்காது. பில்லிங் இயந்திரத்துடன் இணைந்த கருவி மட்டுமே இருக்கும். அது மட்டுமே அனைத்தையும் ஒருங்கிணைக்கும். ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் இனி பில்லிங் என்பது கட்டாயமாக்கப்படும். பார் கோடை ஸ்கேன் செய்து மட்டுமே இனி மதுவிற்க முடியும்.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • 74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார்



  • சென்னை கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் முதல்வர்



  • அதிமுகவில் கோஷ்டி மோதல் உச்சக்கட்டம்; 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ்தான் முதல்வர் வேட்பாளர்...தேனி மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் திடீர் பரபரப்பு



  • அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்?..அமைச்சர்கள் கடும் அதிருப்தி: உட்கட்சி சண்டையால் தொண்டர்கள் விரக்தி



  • தாயுள்ளம் கொண்ட தலைவர் கலைஞர் சட்டமாக்கிய சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தடையின்றி உடனே நடைமுறைப்படுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு; 3 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு



  • தங்கம் விலை 4வது நாளாக சரிவு; இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,832 குறைந்தது..கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தது காரணமா?



  • கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள அதிமுக அரசை மக்கள் நம்பியிருக்காமல் சுய பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுங்கள்; மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்



  • 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் பாஸ்



  • தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]