இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

இரவெல்லாம் செல்போனில் ‘கேம்’ விளையாடியதால் ஆத்திரம்; 11 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்: 10 நாட்களுக்கு பின் அட்டை பெட்டியில் சடலம் மீட்பு

7/9/2025 2:26:41 PM
பிரபல தயாரிப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு : நடிகை பயல் கோஷ் டுவிட்டால் அதிரும் பாலிவுட் கொரோனா தடுப்பு குறித்து வரும் 23ம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: அதிக தொற்று பாதிப்புள்ள மாநில முதல்வர்கள் பங்கேற்பு

பிரசிலியா: பிரேசிலில் இரவெல்லாம் செல்போனில் ‘கேம்’ விளையாடிய 11 வயது மகனை தாய் கழுத்தை நெரித்துக் கொன்றார். 10 நாட்களுக்கு பின் அட்டை பெட்டியில் சடலம் மீட்கப்பட்டது. தாயும் கைது செய்யப்பட்டார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா டகோகென்ஸ்கி (33), ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 11 வயதுடைய ரஃபேல், செல்போனில் அடிக்கடி ‘கேம்’ விளையாடிக் கொண்டிருப்பதில் ஆர்வமுடையவர். இரவு நேரத்தில் நீண்ட நேரம் வரை செல்போனில் ‘கேம்’ விளையாடி வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன், மகன் ரஃபேலிடம் தாய் டகோகென்ஸ்கி, ‘செல்போனில் நீண்ட நேரம் கேம் விளையாட வேண்டாம்’ என்று தொடர்ந்து எச்சரித்து வந்தார். ஆனால், ரஃபேல் விளையாடுவதை விடவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த டகோகென்ஸ்கி, மகனை கழுத்தை ெநரித்துக் கொன்றுவிட்டார். இருந்தும் அவனது உடலை மறைப்பதற்காக, மகனின் சடலத்தை ஓர் அட்டை பெட்டியில் பிளாஸ்டிக் பையில் போட்டு அடைத்தார். பின்னர் அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள வீட்டின் கேரேஜில் (வாகனங்கள் பழுதுபார்க்கும் இடம்) கொண்டு சென்று வைத்துவிட்டு வந்துவிட்டார். கிட்டதிட்ட 10 நாட்களுக்கு மேலான நிலையில் மோசமான அழுகிய துர்நாற்றம் வீசியதால், அப்பகுதியினருக்கு சந்தேகம் ஏற்படவே அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சடலத்தை கைப்பற்றி ஒருவாரமாக விசாரணை நடத்தினர். நீண்ட விசாரணைக்கு பிறகு கொலையானது சிறுவன் ரஃபேல் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து சிறுவனின் தாய் டகோகென்ஸ்கியிடம் விசாரணை நடத்தினர்.

அவர் முன்னுக்குபின் முரணாக பதில் சொன்ன நிலையில், ஒருகட்டத்தில் மகனை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து பிரேசில் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ரஃபேல் தனது தாயிடம் அதிக பாசம் கொண்டிருந்தார். தனது தாய்க்கு அனுப்பிய மெசேஜில், தன்னையும் தனது சகோதரரையும் கவனித்ததற்காக தனது தாய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். தாயின் அன்பு குறித்து புகழ்ந்து கவிதை எழுதியுள்ளார். விசாரணையின் ஆரம்பத்தில் தனது நடத்தை குறித்து மகன் வாக்குவாதம் செய்ததால், அவன் வீட்டை விட்டு ஓடிவிட்டதாகக் கூறி டாகோகென்ஸ்கி தெரிவித்தார்.

போலீசாரின் விசாரணையை திசை திருப்ப முயன்றார். ஆனால் வீட்டிற்கு அருகிலுள்ள காட்டில், ஸ்னிஃபர் நாய்கள் மற்றும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தியதில் உண்மை தெரியவந்தது. செல்போனில் மகன் தொடர்ந்து ‘கேம்’ விளையாடியதால், ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொன்றதாக டகோகென்ஸ்கி ஒப்புக்கொண்டார்’ என்றனர்.

மேலும் சில
  • அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொடிய விஷ ‘பார்சல்’: புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை



  • இது டிரெய்லர்தான்... மெயின் பிக்சர் இனிமேல்தான்... கொரோனாவின் 2வது அலை நிச்சயம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை



  • மத்திய கிழக்கு நாடுகளின் வரலாற்று சிறப்புமிக்க இஸ்ரேல்-யுஏஇ-பஹ்ரைன் அமைதி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து



  • ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி நாளை முதல் மக்களுக்கு விநியோகம்: உலகின் முதல் நாடாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு



  • மாஸ்கோவில் இந்திய-சீன அமைச்சர்கள் சந்திப்பு: எல்லை பதற்றத்தை குறைக்க 5 அம்ச திட்டம்: சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கை



  • சீன மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களின் விசா ரத்து: அமெரிக்கா அதிரடி



  • ஆக்ஸ்போர்டு பல்கலை தடுப்பூசி சோதனை திடீர் நிறுத்தம்: உலகளவிலான 3ம் கட்ட சோதனையில் பின்னடைவு



  • ரஷ்யா பயணத்தை முடித்துக் கொண்டு அமைச்சர் ராஜ்நாத் திடீர் ஈரான் பயணம்



  • உல்லாசத்துக்கு பஞ்சமில்லாத ரிசார்ட், நைட் கிளப், சானா பிரான்சில் நிர்வாண விரும்பிகளின் சொர்க்கபுரியில் கொரோனா தாண்டவம்



  • சட்டசபைக்கு கைக்குழந்தையுடன் வந்த உறுப்பினருக்கு பாராட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]