இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி விஞ்ஞானி திடீர் ராஜினாமா: வேலூரில் உள்ள வீட்டிற்கு திரும்ப திட்டம்

7/7/2025 2:26:02 PM
அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

புதுடெல்லி: மத்திய அரசின் சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பெண் விஞ்ஞானி திடீர் ராஜினாமா செய்துள்ளார். அவர், வேலூரில் உள்ள வீட்டிற்கு திரும்ப திட்டுள்ளதாக தெரிவித்தார். லண்டனின் ராயல் சொசைட்டியின் (எஃப்.ஆர்.எஸ்) ஃபெலோவாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய பெண் விஞ்ஞானி பேராசிரியரான டாக்டர் ககன்தீப் காங், அரியானா மாநிலத்தில் உள்ள மத்திய அரசின் சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (THSTI) நிர்வாக இயக்குநர் மற்றும் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தார். இந்நிறுவனம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பயோடெக்னாலஜி துறையின் கீழ் செயல்படும் ஓர் ஆராய்ச்சி நிறுவனமாகும். கோவிட் -19 மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளைப் பற்றி ஆராயும் குழுவில் ககன்தீப் காங் பணியாற்றி வந்த நிலையில், அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும், அவர் தனது தனிப்பட்ட காரணங்களால் பதவியை ராஜினாமா செய்ததாக கூறினார். வேலூர் கிறிஸ்டியன் மெடிக்கல் கல்லூரியில் (சி.எம்.சி) இரைப்பை குடல் அறிவியல் துறையில் பேராசிரியராக இருந்த இவர், 2016 முதல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவரது பதவிக்காலம் இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தற்போது ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில், அரியானாவின் ஃபரிதாபாத்தின் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், விஞ்ஞானி ககன்தீப் காங்கின் வழிகாட்டுதலின் கீழ், கொரோனா வைரஸ் தடுப்பு ஆன்டிஜென் சோதனைகளை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், கடந்த மே மாதத்தில் அமைக்கப்பட்ட குழுவை ககன்தீப் காங் கலைத்ததால், புதிய சர்ச்சை கிளம்பியது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) குழு மற்றும் பிற குழுக்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், ககன்தீப் காங் ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில், விஞ்ஞானி ககன்தீப் காங் கூறுகையில், ‘குழுவைக் கலைத்ததற்கும், ராஜினாமா செய்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை. தற்போது நான் ராஜினாமா செய்துள்ளேன். அடுத்த மாதம் என் வீட்டிற்கு செல்ல விரும்புகிறேன். வேலூரில் உள்ள வீட்டில் இருக்க விரும்புகிறேன். இன்னும் தேதியை முடிவு செய்யவில்லை’ என்றார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் கண்டுபிடிப்புக்கு அவரது பணி மற்றும் பங்களிப்பு அதிகமாக இருந்ததை போல், காலரா மற்றும் டைபாய்டுக்கான தடுப்பூசிகளை பரிசோதிக்கவும், அதுதொடர்பான பெரிய ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பு, வெல்கம் டிரஸ்ட், சர்வதேச தடுப்பூசி நிறுவனம் மற்றும் மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையம் போன்ற தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் அறிவியல் ஆலோசனைக் குழுக்களில் பணியாற்றியுள்ளார். தற்போது தொற்றுநோய்களுக்கான ஆயத்த கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி அமைப்பின் துணைத் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



  • கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்



  • 20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று



  • சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு



  • 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு



  • திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா



  • ஆக. 14ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்; ரூ15 கோடிக்கு மேல் வரம்பின்றி செல்லும் குதிரை பேரம்: முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]