இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் 68 வயதில் மரணம்: சக்கர நாற்காலியிலேயே முடிந்த சவாலான வாழ்க்கை

7/7/2025 2:25:19 PM
பிரபல தயாரிப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு : நடிகை பயல் கோஷ் டுவிட்டால் அதிரும் பாலிவுட் கொரோனா தடுப்பு குறித்து வரும் 23ம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: அதிக தொற்று பாதிப்புள்ள மாநில முதல்வர்கள் பங்கேற்பு

டேட்டன்: அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் தங்களது 68 வயதில் மறைந்தனர். அவர்களது சவாலான வாழ்க்கை, சக்கர நாற்காலியிலேயே முடிந்தது. அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தின் பீவர் க்ரீக்கைச் சேர்ந்த இரட்டை சகோதரர்களான ரோனி மற்றும் டோனி கலியன் ஆகியோர் அக்டோபர் 28, 1951ல் பிறந்தனர். கடந்த 2014ம் ஆண்டில், சகோதரர்கள் இருவரும் தங்களது 63வது பிறந்தநாளை கொண்டாடும்போது, உலகின் மிகப் பழமையான இணைந்த இரட்டையர் என்ற பெருமையைப் பெற்றனர். தற்போது 68 வயதான இருவரும், டேட்டனில் உள்ள நல்வாழ்வு பராமரிப்பு மையத்தில் தங்கியிருந்து ஓய்வெடுத்து வந்தனர்.

இந்நிலையில், ஒரே உடலை பெற்று வாழ்ந்து வந்த இருவரும் இறந்ததாக ேடட்டனில் உள்ள நலவாழ்வு பராமரிப்பு மையம் அறிவித்தது. இதனை அவர்களது சகோதரர் ஜிம் உறுதிபடுத்தினார். ஒட்டிப் பிறந்து குழந்தைகளாக வாழ்க்கையை தொடங்கிய சகோதரர்கள் இருவரும், திருவிழாக்கள் மற்றும் சர்க்கஸ்களில் ‘சைட் ஷோ’ நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவாய் ஈட்டி வாழ்ந்தனர். அவர்களது சகோதரர் ஜிம், தங்களது குடும்பத்தை இரட்டை சகோதரர்கள் காப்பாற்றி வந்ததாக தெரிவித்தார். டி.எல்.சி அமைப்பு 2010ல் இவர்களைப் பற்றிய ஆவணப்படத்தை ஒளிபரப்பியது. சகோதரர்கள் இருவரும் 1991ம் ஆண்டில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். 2010ம் ஆண்டு முதல் தனியாக வாழ்ந்தனர். உடல்நலப் பிரச்னைகள் காரணமாக குடும்ப உறுப்பினர்களுடன் சில காலம் வாழ்ந்தனர்.

சக்கர நாற்காலியில் வாழ்க்கையை 68 வருடங்களாக நடத்திய இந்த சகோதரர்கள் மறைவு, அவர்களின் சொந்தங்கள் மற்றுமின்றி அனைருக்கும் சவாலான வாழ்க்கை பாடமாக இருந்துள்ளது என்று, அவர்களது நண்பர்கள் தெரிவித்தனர். முன்னதாக டேட்டன் நகர சமூகம், இவர்களுக்காக நிதி திரட்டியது மற்றும் அவர்களின் புதிய வீட்டை புதுப்பிக்க உதவியது என்று டேட்டன் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் சில
  • அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொடிய விஷ ‘பார்சல்’: புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை



  • இது டிரெய்லர்தான்... மெயின் பிக்சர் இனிமேல்தான்... கொரோனாவின் 2வது அலை நிச்சயம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை



  • மத்திய கிழக்கு நாடுகளின் வரலாற்று சிறப்புமிக்க இஸ்ரேல்-யுஏஇ-பஹ்ரைன் அமைதி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து



  • ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி நாளை முதல் மக்களுக்கு விநியோகம்: உலகின் முதல் நாடாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு



  • மாஸ்கோவில் இந்திய-சீன அமைச்சர்கள் சந்திப்பு: எல்லை பதற்றத்தை குறைக்க 5 அம்ச திட்டம்: சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கை



  • சீன மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களின் விசா ரத்து: அமெரிக்கா அதிரடி



  • ஆக்ஸ்போர்டு பல்கலை தடுப்பூசி சோதனை திடீர் நிறுத்தம்: உலகளவிலான 3ம் கட்ட சோதனையில் பின்னடைவு



  • ரஷ்யா பயணத்தை முடித்துக் கொண்டு அமைச்சர் ராஜ்நாத் திடீர் ஈரான் பயணம்



  • உல்லாசத்துக்கு பஞ்சமில்லாத ரிசார்ட், நைட் கிளப், சானா பிரான்சில் நிர்வாண விரும்பிகளின் சொர்க்கபுரியில் கொரோனா தாண்டவம்



  • சட்டசபைக்கு கைக்குழந்தையுடன் வந்த உறுப்பினருக்கு பாராட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]