இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கொரோனா வினால் மூச்சு திணறல் பாதிப்பு அதிகரிப்பு; அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கூடுதலாக அமைப்பு: உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை

7/7/2025 2:23:25 PM
அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

சென்னை:கொரோனா பாதிப்பால் மூச்சு திணறல் ஏற்பட்டு அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்ைக அதிகரித்து வருவதை தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் கூடுதலாக அமைக்கப்பட்டு வருகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தற்போது வரை மாநிலம் முழுவதும் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்படுவர்கள் மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதாவது, குறைவான பாதிப்பு, நடுநிலையான பாதிப்பு, அதிகமான பாதிப்பு என்ற அடிப்படையில் அவர்கள் பிரிக்கப்படுகின்றனர். இதில், குறைவான பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் இருந்தும், நடுநிலை மற்றும் அதிகமான பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் தங்களின் பாதிப்பை வெளியே சொல்லாமல் வீட்டிலேயே இருக்கின்றனர்.

அவர்கள் பாதிப்பு அதிகமான பிறகு தான் மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்னரே திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விடுகின்றனர். மூச்சுத்திணறல்தான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டவுடன் ஆக்ஸிஜன் அளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்ய அறிவுரை வழங்கியுள்ளார். அதன்பேரில், 31 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 162 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வைக்கப்படுகிறது.

குறிப்பாக, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 20 கிலோ லட்சம் லிட்டர் வைக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 20 கிலோ லட்சம் லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கப்படுகிறது. அதே போன்று ஸ்டான்லி மருத்துவமனையில் 10 கிலோ லட்சம் லிட்டர் தேவைப்படும் நிலையில் தற்போது 10 கிலோ லட்சம் லிட்டர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 13 கிலோ லட்சம் லிட்டர், ஓமந்தூரர் அரசு மருத்துவமனை 13 கிலோ லட்சம் லிட்டர், ராயப்பேட்டை 6 கிலோ லட்சம் லிட்டர், கஸ்தூரி பாய் காந்தி மருத்துவமனையில் 6 கிலோ லட்சம் லிட்டர், தாம்பரம் மருத்துவமனையில் 6 கிலோ லட்சம் லிட்டர், மதுரை மருத்துவகல்லூரியில் 20 கிலோ லட்சம் லிட்டர் என மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் சில
  • தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது



  • திருக்குவளையில் கருணாநிதி சிலை மு.க.ஸ்டாலின் 7ம் தேதி திறக்கிறார்



  • மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல்



  • மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்



  • கடலூர் அருகே பயங்கரம்; மாஜி பஞ். தலைவரின் தம்பி படுகொலை: 25 படகுகளுக்கு தீ வைப்பு



  • தமிழகம் முழுவதும் ஆகஸ்டு மாத முதலாவது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; விதிகளை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு



  • தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது குவியும் புகார்கள்: ஏடிஎஸ்பி விசாரணை



  • பிளஸ் 1 பொது தேர்வு முடிவு வெளியீடு: 96.04 சதவீதம் பேர் தேர்ச்சி



  • அண்ணா சிலைக்கு காவி துணி அணிவிப்பு: கன்னியாகுமரியில் பரபரப்பு



  • மத்திய அரசு கட்டுப்பாடுகள் தளர்த்தியுள்ள நிலையில் தமிழகத்தில் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]