இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி என்ற பெயரில் ரூ7220 கோடி அன்னிய செலாவணி மோசடி: நகைக்கடை உரிமையாளர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு

7/7/2025 2:20:28 PM
அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

புதுடெல்லி: கொல்கத்தாவில் உள்ள நகைக்கடை நிறுவனம் ரூ.7220 கோடி அன்னியச்செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்து, சம்மன் அனுப்பியுள்ளனர். கொல்கத்தாவை மையமாக கொண்டு நகைக்கடை நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 20 பொதுத்துறை வங்கிகள் மற்றும் 5 தனியார் வங்கிகளிடம் இருந்து ரூ.2,672 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு இருந்தது. இந்தியாவில் அதிக வங்கிக்கடன் மோசடியில் ஈடுபட்டுள்ள 100 நிறுவனங்களில் இந்த நிறுவனமும் ஒன்று என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக சி.பி.ஐ., வருவாய் புலனாய்வுத்துறை ஆகிய அமைப்புகள் இந்த நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்களான 3 சகோதரர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இதில் நிலேஷ் பரேக் என்ற நிர்வாகி கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையும் கடந்த 2018-ம் ஆண்டு நிதி மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனமும், அதன் இயக்குனர்களும் வெளிநாட்டு ஏற்றுமதி என்ற பெயரில் கோடிக்கணக் கில் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடித்து உள்ளனர். அந்தவகையில் ரூ.7,220 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது அன்னிய செலாவணி நிர்வாக சட்டத்தின் (பெமா) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு இந்த நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை சிறப்பு இயக்குனர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். பெமா சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இதுவரை நோட்டீஸ் அனுப்பிய சம்பவங்களில் இதுதான் மிகப்பெரிய தொகை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இந்த நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதால், சிபிஐயும் வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே நகைக்கடை நடத்தி பல கோடி ரூபாய் அன்னியச்செலாவணி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி தப்பிச் சென்று விட்டார். அவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இந்தநிலையில், மேலும் ஒரு நகைக்கடை நிறுவனம் ரூ.7220 கோடி மோசடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



  • கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்



  • 20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று



  • சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு



  • 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு



  • திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா



  • ஆக. 14ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்; ரூ15 கோடிக்கு மேல் வரம்பின்றி செல்லும் குதிரை பேரம்: முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]