இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

கொரோனாவுக்கு மத்தியில் புதிய அச்சுறுத்தல் சீனாவில் ‘புபோனிக் பிளேக்’ நோய்: சகோதரர் இருவர் பலியால் 146 பேர் தனிமை

7/6/2025 2:35:56 PM
90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

பீஜிங்: கொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ‘புபோனிக் பிளேக்’ என்ற நோய் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டில் சகோதரர் இருவருக்கு இந்நோய் உறுதியானதால் மக்கள் பீதியில் உள்ளனர். வடக்கு சீனாவில், ‘புபோனிக் பிளேக்’ நோய் பரவும் வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மங்கோலியா என்ற மாகாணத்தில் பையனூர் நகரில், சகோதரர்கள் இருவர் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தனர். அவர்களது ரத்த மாதிரிகளை பரிசோதித்ததில் இருந்து, புபோனிக் (வேகமாக பரவும் வகை) பிளேக் நோயாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, மூன்றாம் எண் நோய் கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டு, மக்கள் பின்பற்றுமாறு சீன அரசு வலியுறுத்தியுள்ளது.

உயிரிழந்த சகோதரர்கள் இருவரும் காட்டு அணில் கறியை உண்டதாலேயே இந்த பிளேக் நோய் அவர்களுக்கு தொற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் காட்டு அணில் கறியை மக்கள் உண்ண வேண்டாம் என்றும் அரசு எச்சரித்துள்ளது. இந்த புபோனிக் பிளேக்கானது, எலி போன்ற கொறிக்கும் வகை உயிரினங்களில் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வகை பாக்டீரியா மூலம் பரவுகிறது. தற்போது உயிரிழந்த இருவருடன் தொடர்பில் இருந்து 146 பேரை தனிமைப்படுத்தி உள்ளனர். இவ்வகை பிளேக் நோய் ஏற்பட்டால் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சரியான நேரத்தில் சிகிச்சை வழங்காவிட்டால், 24 மணி நேரத்தில் உயிரைப் பறிக்கும் என உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. சீனாவில் கடந்த 10 ஆண்டுகளில் புபோனிக் பிளேக்கால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். தற்ேபாது கொரோனா வைரசால் உலகமே அவதிப்பட்டு வரும் நிலையில், புபோனிக் பிளேக் நோயால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மேலும் சில
  • இஸ்ரேல், அமெரிக்கா, சவுதி தலைவர்கள் ரகசிய சந்திப்புக்கு இடையே ஈரான் அணுகுண்டு விஞ்ஞானி சுட்டுக் கொலை; மேற்கு ஆசியாவில் போர் மேக அச்சம்



  • 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்ணில் பாய்ந்தது



  • உலகம் முழுவதும் கொரோனாவின் 2ம் அலை?..அமெரிக்காவில் ஒரே நாளில் 1.56 லட்சம் பேர் பாதிப்பு



  • அமெரிக்க அதிபர், துணை அதிபராக வெற்றிப் பெற்ற ஜோ பிடன், கமலா ஹாரிசுக்கு தலைவர்கள் வாழ்த்து: அடுத்தாண்டு ஜனவரி மாதம் பதவியேற்பு விழா



  • 5 மாகாண முடிவு தாமதம், டிரம்ப்பின் நீதிமன்ற வழக்கால் சிக்கல் புதிய அமெரிக்க அதிபர் நவ. 12ல் அறிவிப்பு?



  • மெஜாரிட்டிக்கு இன்னும் 6 எலக்டோரல் வாக்குகள் தேவை: அமெரிக்க அதிபராகிறார் ஜோ பிடன்



  • அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் இழுபறிக்கு இடையே ஜோ பிடன் முந்துகிறார்: டிரம்ப்பும் அதிக இடங்களை கைப்பற்றினார்



  • முன்கூட்டியே 9 கோடி பேர் வாக்களித்த நிலையில் அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல்: மகுடம் சூடப்போவது டிரம்பா? ஜோ பிடனா?



  • நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள்; துருக்கி, கிரேக்கத்தில் ‘மினி’ சுனாமி பேரலை: இடிபாடுகளில் சிக்கி 23 பேர் பலி; மீட்புப் பணி தீவிரம்



  • விமானி அபிநந்தன் விடுவிப்பு குறித்த விவாத கூட்டத்தில் பாக். ராணுவ தளபதியின் கால்கள் நடுங்கின... வியர்த்து கொட்டியது! சம்பவம் நடந்து ஓராண்டுக்கு பின் திடீர் அரசியல் பரபரப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]