இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கொரோனா தொற்றுக்கு 33 வயதே ஆன சென்னை ஆயுதப்படை காவலர் பலி

7/6/2025 2:34:05 PM
74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார் நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் கொண்டாட்டம்; பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை..தேசிய கொடி ஏற்றிவைத்து பிரதமர் மோடி பேச்சு

சென்னை: கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த 33 வயதே ஆன ஆயுதப்படை காவலர் ஒருவர் இன்று காலை உயிரிழந்தது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உயிர்களை பலி வாங்கி வருகிறது. தமிழகத்திலும் கடும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும் நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவது கவலையளித்து வருகிறது. பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் பலர் இந்த நோய் தொற்றுக்கு ஆளாகி வருவது காவல் துறையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட இதுவரை இரண்டு பேர் கொரோனா தொற்று காவல் துறையில் உயிரிழந்துள்ளனர்.  இந்த சூழ்நிலையில், கொரோனா தொற்றால் சென்னை ஆயுதப்படை காவலர் நாகராஜன் என்பவர் பாதிக்கப்பட்டார். இவர் வேப்பேரி காவல் நிலைய ஆயுதப்படையில் இருந்து அயல் பணியாக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் வேப்பேரி கார்பரேஷன் அலுவலகத்தில் ெகாரோனா பரிசோதனை செய்துள்ளார். இதில் நாகராஜனுக்கு கடந்த 4ம்தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு நாகராஜன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  நாகராஜனுக்கு 33 வயதே ஆன நிலையில், கொரோனா தொற்றுக்கு பலியாகியிருப்பது காவல் துறையினர் மத்தியில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை அடுத்த அம்மாப்பட்டி. இவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  காவல் துறையினர் ஏராளமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்றும், பலர் சிகிச்சை முடித்து மீண்டும் பணிக்கு திரும்பி வருகின்றனர். காவல் துறையில் இதுவரை 3 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • 74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார்



  • சென்னை கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் முதல்வர்



  • அதிமுகவில் கோஷ்டி மோதல் உச்சக்கட்டம்; 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ்தான் முதல்வர் வேட்பாளர்...தேனி மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் திடீர் பரபரப்பு



  • அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்?..அமைச்சர்கள் கடும் அதிருப்தி: உட்கட்சி சண்டையால் தொண்டர்கள் விரக்தி



  • தாயுள்ளம் கொண்ட தலைவர் கலைஞர் சட்டமாக்கிய சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தடையின்றி உடனே நடைமுறைப்படுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு; 3 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு



  • தங்கம் விலை 4வது நாளாக சரிவு; இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,832 குறைந்தது..கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தது காரணமா?



  • கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள அதிமுக அரசை மக்கள் நம்பியிருக்காமல் சுய பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுங்கள்; மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்



  • 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் பாஸ்



  • தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]