இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சென்னையில் வைரஸ் கட்டுப்பாட்டு பகுதிகள் எண்ணிக்கை 158 ஆக உயர்வு: தண்டையார் பேட்டையில் அதிகரிப்பு

7/6/2025 2:32:00 PM
74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார் நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் கொண்டாட்டம்; பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை..தேசிய கொடி ஏற்றிவைத்து பிரதமர் மோடி பேச்சு

சென்னை: சென்னையில் வைரஸ் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. தண்டையார்பேட்டையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.   சென்னை மாநகரட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதைத் தடுக்க மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன்படி சென்னையில் ஒரு தெருவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அந்த தெரு முழுவதையும் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வந்தது.

 இந்நிலையில் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிக்கவே ஒரு தெருவில் 5 நபர்களுக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் சென்னையில் நாளுக்கு நாள் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. 200க்கு மேல் இருந்த கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 60 ஆக குறைந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களில் ஒரு குறிப்பிட்ட தெருவில் அதிகம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் வைரஸ் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 58 கட்டுப்பாடு பகுதிகள் உள்ளது.

இதில் 10க்கு  மேற்பட்ட தெருக்கள் கடந்த 7 நாட்கள் முன்பு முதல் வைரஸ் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு அடுத்தபடியாக அண்ணா நகர் மண்டலத்தில் 43 பகுதிகளும்,  கோடம்பாக்கம் மண்டத்தில் 13 தெருக்களும், வளசரவாக்கம் மண்டலத்தில் 10 தெருக்களும், அடையாறு மண்டலத்தில் 10 தெருக்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 8 தெருக்களும், திரு.வி.நகர் மண்டலத்தில் 7 தெருக்களும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 4 தெருக்களும் நோய் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து 14 நாட்கள் இந்த தெருக்களில் புதிய தொற்றுகள் பதிவு ஆகாமல் இருந்தால் இந்த  பகுதி கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து விலக்கி கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தது.

மேலும் சில
  • 74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார்



  • சென்னை கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் முதல்வர்



  • அதிமுகவில் கோஷ்டி மோதல் உச்சக்கட்டம்; 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ்தான் முதல்வர் வேட்பாளர்...தேனி மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் திடீர் பரபரப்பு



  • அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்?..அமைச்சர்கள் கடும் அதிருப்தி: உட்கட்சி சண்டையால் தொண்டர்கள் விரக்தி



  • தாயுள்ளம் கொண்ட தலைவர் கலைஞர் சட்டமாக்கிய சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தடையின்றி உடனே நடைமுறைப்படுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு; 3 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு



  • தங்கம் விலை 4வது நாளாக சரிவு; இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,832 குறைந்தது..கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தது காரணமா?



  • கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள அதிமுக அரசை மக்கள் நம்பியிருக்காமல் சுய பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுங்கள்; மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்



  • 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் பாஸ்



  • தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]