இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கொரோனா தடுப்பூசி பரிசோதனை; சர்வதேச விதிமுறைப்படி நடக்கும்: சர்ச்சைக்கு ஐசிஎம்ஆர் விளக்கம்

7/5/2025 2:47:16 PM
அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

புதுடெல்லி: கொரோன தடுப்பு மருந்து குறித்து புதிய சர்ச்சை கிளம்பியதால், பரிசோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் என ஐசிஎம்ஆர் உறுதி அளித்துள்ளது. கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்துடன் இணைந்து புதிய தடுப்பு மருந்து ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.  ஊசி மூலம் செலுத்தக் கூடிய இந்த மருந்து குறித்த சோதனைகள் நடைபெற உள்ளன. இந்த பரிசோதனைக்காக நாடு முழுவதும் 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யபட்டுள்ளன. இவற்றில் ஒன்று சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ளது.  

இதைதவிர, விசாகப்பட்டினம், ரோடக், டெல்லி,  பாட்னா, பெல்காம், நாக்பூர், கோரக்பூர், ஐதராபாத்,  ஆர்யா நகர், கான்பூர், மற்றும் கோவா ஆகிய இடங்களிலும் சோதனை நடக்க உள்ளது. இந்த மருத்துவமனைகள் இந்த சோதனை தொடங்க தேவையான அனைத்து ஒப்புதல்களையும்  பெற்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது.  இந்த சோதனைகளை விரைவு படுத்தி ஆக. 15ம் தேதி முதல் சிகிச்சையைத் தொடங்க ஐசிஎம்ஆர் தீவிரமாக களத்தில் இறங்கி உள்ளது. ஆனால், அவசரகதியில் கொரோனா தடுப்பூசி வெளியிட ஐசிஎம்ஆர் செயல்பட்டு வருவதாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஐசிஎம்ஆர் வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா தடுப்பு மருந்து  பரிசோதனையில் பாதுகாப்பு முக்கியம் என்பதில் எவ்வித சமரசமும் கிடையாது.  இதற்கான சோதனைகள் அனைத்தும் சர்வதேச விதிமுறைகளின் படியே நடக்கும் என்பதை உறுதியாக கூறுகிறோம். இந்த விதிமுறைப்படி விலங்குகள், மனிதர்கள் ஆகியோரிடம் சோதனை நடக்கும். விதிமுறைகளின்படி தொடர் ஆய்வு, பரிசோதனைக்கு பின்னரே நடைமுறைக்கு வரும்’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



  • கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்



  • 20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று



  • சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு



  • 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு



  • திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா



  • ஆக. 14ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்; ரூ15 கோடிக்கு மேல் வரம்பின்றி செல்லும் குதிரை பேரம்: முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]