முகக்கவசம் அணியாதவர்களுக்கு கேரளாவில் ரூ10,000 அபராதம்
7/5/2025 2:44:07 PM
திருவனந்தபுரம்: கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக நோயாளிகளின் எண்ணிக்கை 100ஐ தாண்டிய நிலையில், நேற்று முன்தினம் முதன்முதலாக இது 200ஐ தாண்டியது. நேற்று 2வது நாளாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 240 ஆக உயர்ந்தது. கேரளாவில் நேற்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் 5,204 ஆக உள்ளது. இதற்கிடையே கேரளாவில் சமூக பரவல் தொடங்கி விட்டதாக இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு நிபந்தனைகளை மேலும் கடுமையாக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது.
கேரளாவில்தான் இந்தியாவிலேயே முதன்முதலாக கடந்த ஜனவரி 30ம் தேதி ெகாரோனா உறுதி செய்யப்பட்டது. இதன்பிறகு ேநாயாளிகளின் எண்ணிக்கை 1,000ஐ கடக்க 4 மாதங்கள் ஆயின. தற்போது கடந்த 4 நாட்களில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 1,000ஐ கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கேரளாவில் தொற்றுநோய் பரவல் சட்டம் அமலில் உள்ளது. தற்போது இதில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் வாகனங்களில் ெசல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அணியாவிடில் ரூ.10 ஆயிரம் வரை அபராதமும், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும். கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஒரேநேரத்தில் 25 பேருக்கு மேல் கூடக்கூடாது. கண்டிப்பாக கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும்.
பொது இடங்கள், நிகழ்ச்சிகளின் கலந்து கொள்பவர்கள் 6 அடி அகலம் இடைவெளி கடைபிடிக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கூடக்கூடாது. மேலும் கிருமிநாசினி வைத்திருப்பதோடு, அனைவரும் முகக்கவசமும் அணிந்திருக்க வேண்டும். அரசியல் கட்சியினர், அமைப்பினர் அனுமதியில்லாமல் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது. போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் 6 அடி அகலம் இடைவெளி கடைபிடிக்க வேண்டும். 10 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். சாலைகள், நடைபாதை உட்பட பொது இடங்களில் எச்சில் உமிழக்கூடாது என்பன போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.