இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

எப்படியெல்லாம் பந்தா பண்ணுறாங்கய்யா...₹2.9 லட்சம் மதிப்பில் தங்கத்தில் ‘மாஸ்க்’: மகாராஷ்டிரா நபருக்கு இணையவாசிகள் குட்டு

7/4/2025 1:57:00 PM
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

மும்பை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரூ.2.9 லட்சம் மதிப்பில் தங்கத்திலான மாஸ்க் அணிந்துள்ள மகாராஷ்டிரா நபரை பலரும் இணையத்தில் கண்டித்துள்ளனர். உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாஸ்க் அணிதல், தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்தல், அத்தியாவசிய வேலைகளுக்கு வெளியே சென்றாலும் கூட்டத்தை தவிர்த்து தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் போன்ற சில அடிப்படை விஷயங்களை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் மாஸ்க் என்பது அத்தியாவசிய ஒன்றாகிவிட்ட நிலையில், தங்க நகைகளை அணிவதில் ஆர்வம் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே பகுதியைச் சேர்ந்த ஷங்கர் குரேட் என்பவர், தங்கத்தினால் ஆன மாஸ்க் ஒன்றை தயாரித்து அணிந்து வருகிறார்.

சுமார் ரூ.2.89 லட்சம் மதிப்புடைய இந்த மாஸ்க்கில் சிறிய சிறிய துளைகள் இடப்பட்டுள்ளன. இதனால் தனக்கு சுவாசத்துக்கு பிரச்னை இல்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஷங்கர் குரேட் கூறுகையில், ‘நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்க இந்த தங்க மாஸ்க் உதவுமா? என்பது சந்தேகம் தான். ஆனால், எனக்கு தங்கத்தில் மாஸ்க் அணிய வேண்டும் என்ற ஆசை இருந்ததால், இவ்வாறு செய்தேன்’ என்றார். இதற்கிடையே, ஷங்கரின் தங்க மாஸ்க் குறித்து பதிவிட்டுள்ள இணையவாசிகள் தங்கத்தால் ஆன மாஸ்கால் உங்களுக்கு விளம்பரம் கிடைக்குமே தவிர நோய்த்தொற்றில் இருந்தெல்லாம் காக்காது என்று கிண்டல் அடித்தும், திட்டியும் எழுதி தீர்த்து வருகின்றனர்.

மேலும் சில
  • சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு



  • டிராக்டர் பேரணியில் வன்முறை: விவசாய சங்கங்கள் மீது 22 வழக்குகள் பதிவு: டெல்லியில் 3 அடுக்கு பாதுகாப்பு



  • டெல்லியில் பிரமாண்ட டிராக்டர் பேரணி: சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது போலீஸ் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு



  • 8 ஆண்டுக்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி: திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல்



  • கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து இந்தியா வருகிறது மாடர்னா தடுப்பூசி



  • கண்கவர் கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்புகளுடன் குடியரசு தின விழா கோலாகலம்: டெல்லியில் குடியரசு தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார்



  • தாகூரை போன்று தாடி: மோடியை கிண்டல் செய்யும் சிவசேனா



  • அமெரிக்காவை முந்துகிறது இந்தியா; 8 நாட்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தகவல்



  • நாளை மறுநாள் நடக்கும் குடியரசு தின விழாவிற்கு மத்தியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி: டெல்லியில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை எச்சரிக்கை



  • மே 29ம் தேதி காங். கட்சி தலைவர் தேர்தல்?.. செயற்குழு கூட்டத்தில் முடிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]